இதுதான் லட்சணம்.. தேனி சிறையிலிருந்து தப்பிய மாற்றுத் திறனாளி! சிறைக்கு அருகே இருந்தும் தேடாத போலீஸ்

  • தேனி: தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய விவகாரம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லிங்க பிரசாத். மாற்று திறனாளியான இவர் சிறை வளாகத்துக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் நீண்ட நேரமாக ஒளிந்து இருக்கிறார். ஆட்டோ மூலம் தப்ப முயன்ற போதுதான் ஆட்டோ ஓட்டுநரே போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

    Advertisement

    பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார் மாற்று திறனாளி லிங்கப் பிரசாத்தைக் கைது செய்யவில்லை எனவும், ஆட்டோ ஓட்டுனர் தான் பிடித்துக் கொடுத்தார் அதிகாரிகள் மீதும் காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

    Advertisement

    தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறையானது அமைந்திருக்கிறது. இந்த சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை சுமார் பத்து மணி அளவில் சிறையில் மூன்றாவது அறையில் அடைக்கப்பட்டு இருந்த முத்து இளங்கோவன் என்ற விசாரணை கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் சிறைகாவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

    அங்கு சென்று பார்த்த போது அங்கிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் அறைக் காவலரான ஸ்டாலின் பிரபுவை கடுமையாக தாக்கியதோடு அவரிடம் சாவியை பறித்துள்ளனர். பின்பு நுழைவு வாயிலிருந்து காவலர் தங்கபாண்டியையும் தாக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். நள்ளிரவில் இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதும் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் சோதனை நடத்தப்பட்டது.

    Advertisement

    பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்களில் சோதனையை தீவிர படுத்தினர் போலீசார். இதில் நவீன் என்ற சிறை கைதி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவராகவே வந்து சரணடைந்தார். மேலும் பலரை தேடி வந்த நிலையில் திருமலாபுரம் மலைப் பகுதியில் ஒளிந்திருந்த சிலம்பரசன், சிக்கந்தர், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    தேனி சிறையில் சித்ரவதை! நீதிபதியிடம் சொல்வதற்காகவே தப்பினோம்! கைதி மீனாட்சி சுந்தரம் வீடியோ

    பின்னர் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் சிறைக்கு பின்னால் இருந்த மலைப்பகுதியில் பதுங்கி இருந்த சோலை, முகிலேஸ்வரன், கருப்பசாமி, கார்த்தி ராஜா, தருண்குமார் ஆகியோர் கைதாகினர். கடைசியாக நான்கு பேர் மட்டும் தேடப்பட்டு வந்த நிலையில் மீனாட்சி சுந்தரம், திருப்பதி, பொன் முத்துச்செல்வம், கன்னியாகுமரி ரெஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    சிறையில் தப்பிக்க திட்டத்தை போட்டுக் கொடுத்தது லிங்க பிரசாத் என்பவர் தான் என்பதும், இவர் மாற்றுத்திறனாளி என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதாவது சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தப்பிப்பதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார் லிங்க பிரசாத்.

    அது மட்டுமல்லாமல் வலிப்பு வருவது போல ஒருவர் நடித்தால் நிச்சயம் காவலர்கள் உள்ளே வருவார்கள் அவர்களை தாக்கி விட்டு தப்பி விடலாம் என சொல்லி இருக்கிறார். மற்றவர்கள் வேக வேகமாக சிறையில் இருந்து ஓடிவிட்டு நிலையில், மாற்று திறனாளியான லிங்கபிரசாத்தால் சிறையில் இருந்து சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை.

    Advertisement
    என் மகன் மீது போலீஸ் மிருகத்தனமான தாக்குதல்! தேனி சிறை கைதி மீனாட்சி சுந்தரத்தின் தாய் கண்ணீர் மனு

    இதை அடுத்து சிறைக்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில்தான் நீண்ட நேரமாக மறைந்திருக்கிறார் லிங்க பிரசாத். பின்னர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி தப்பிக்க முயன்ற நிலையில் ஆட்டோ ஓட்டுநரை நேரடியாக அவரை சிறையில் வந்து ஒப்படைத்துள்ளார். ஆனால் ரோந்து போலீசார் கைது செய்ததாக போலீசார் அறிக்கை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் பிரசாத்தை பல இடங்களில் தேடிய நிலையில் சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தப்படவில்லை எனவும் அதனால்தான் நீண்ட நேரம் ரிங்க பிரசாத் அங்கு மறைந்திருக்கிறார் என்கின்றனர். நடக்க முடியாத மாற்று திறனாளியான லிங்க பிரசாத் தற்போது பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Lingaprasad, accused of planning the escape of 17 inmates from Theni prison, reportedly hid at a nearby bus stop before an auto driver caught him.