1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்! தடுக்க முயன்ற கம்பம் தவெக எம்எல்ஏவை கார் ஏற்றி கொல்ல முயற்சி!

  • தேனி: தேனி மாவட்டம், கம்பத்தில் காலி இடத்தில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த முயன்ற கம்பம் எம்எல்ஏவை, கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த அரிசி கடத்தல்காரர்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கம்பம், எட்டி, போடி மெட்டு, குமுளி ஆகிய மூன்று மலைச்சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    Advertisement

    தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை லாப நோக்கத்திற்காக சிலர் கேரளாவிற்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுப்பதற்கு அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த போதும் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று தேனி மாவட்டம், கம்பம் உதய நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலினை அடுத்து எம்எல்ஏ அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார்.

    அப்போது ஒரு வாகனத்தில் அவசர அவசரமாக நான்கு பேர் கொண்ட கும்பல் 20-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தனராம். இதனை கண்ட கம்பம் எம்எல்ஏ அவர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

    Advertisement

    அவரை கண்டவுடன் அந்த கும்பல் வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். தப்பிச் செல்லும் போது அந்த வாகனத்தை எம்எல்ஏ மீது ஏற்றி கொல்ல முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் எம்எல்ஏ பின்னோக்கி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் அங்கு நடக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த காலி இடத்தில் சென்று பார்த்த போது 34 மூட்டைகளில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து உடனடியாக உத்தமபாளையம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை, கம்பம் வடக்கு காவல் துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரி உள்ளிட்டோருக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தகவல் அளித்தார்.

    Advertisement

    உடனடியாக சம்பவ இடத்திற்கு அரசுத்துறை அதிகாரிகள் விரைந்தனர். அரிசி மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே இருந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு அரிசி கடத்தல் தொடர்பான தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்று இருந்துள்ளது. அதை காவல்துறையினர் கைப்பற்றினர்.

    ரேசன் அரிசியை.. சன்னரக அரிசினு சொல்லி விக்கிறீங்களே! கேள்வி கேட்ட மக்கள்! சைஸாக நழுவிய தவெக எம்எல்ஏ

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பிடித்து விசாரணையை தொடங்கினர். மேலும் கம்பம் சட்டமன்ற உறுப்பினரை வாகனத்தைக் கொண்டு ஏற்றி கொலை முயற்சி செய்ய முயன்று தப்பி ஓடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    Advertisement

    இச்சம்பவம் குறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றி கழகத்தின் தேனி தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில் "கம்பம் சட்டமன்ற தொகுதியில் அரிசி கடத்தலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக கேரளா எல்லைப் பகுதியில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு சென்று இரவு நேரங்களில் அரிசி கடத்தல் தொடர்பான வாகனங்களை ஆய்வு செய்துள்ளேன். ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கக் கூடிய அரிசியை கடத்திச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

    Advertisement
    ரேசன் அரிசியை பாலிஷ் போட்டு.. தவெக எம்எல்ஏவை விரட்டிய மக்கள்! இது தான் மாற்றமா? உதயநிதி அட்டாக்!

    இந்நிலையில் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக வந்த தகவலை அடுத்து இந்த பகுதிக்கு வந்து பார்த்தபோது அரிசியை கடத்திக் கொண்டிருந்தனர். என்னை பார்த்ததும் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை பிடிப்பதற்காக நான் சென்றபோது என்னை வாகனத்தில் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி செய்தனர். நல்ல வேளை அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன்.

    மேலும் இந்த கடத்தல் தொடர்பாக உயர் அரசு துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இனிவரும் காலத்தில் இது போன்ற அரிசி கடத்தலில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு அரிசி கடத்தலை முற்றிலும் தடுப்பதற்காக தான் பாடுபடுவேன் என கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Cumbum MLA Jaganath misra found 1500 kg of ration rice illegally stored in an empty place in Theni district. The smugglers attemped to ram their vehicle on MLA and fled away.