கம்பம் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா சாப்பிட்டது ரீல்ஸ் தோசையா? இறுதியில் பெரிய ட்விஸ்ட்

  • தேனி: கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா வெளியில் இருந்து தோசை வாங்கி வந்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ரீல்ஸ் எடுத்ததாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அம்மா உணவகத்தில் தோசை வழங்கப்படுவதில்லை - த.வெ.க எம்எல்ஏவுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார்கள். இந்த விமர்சனங்கள் ஒரு புறம் எனில், கம்பம் அம்மா உணவகத்தில் தோசை சுட்டு வழங்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. கம்பம் அம்மா உணவகத்தில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், வெரைட்டி ரைஸ் மட்டுமின்றி, தோசையும் சுட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள் . கம்பம் அம்மா உணவத்தில் மட்டும் எப்படி தோசையும் வழங்கப்படுகிறது என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.

    Advertisement

    தேசிய செட்டியார் பேரவை என்ற அமைப்பை தொடங்கிய ஜெகநாத் மிஸ்ரா, அதன்பிறகு குறுகிய காலத்திலேயே கட்சியாகவும் அதனை மாற்றினார். நமது மக்கள் முன்னேற்றக்கழகம் என்று கட்சி ஆரம்பித்து நடத்தி வந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில், திடீரென தவெக தலைமை அலுவலகம் வந்தவர், புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தவெக சார்பில் போட்டியிட விரும்புவதாக கூறினார்.

    Advertisement

    தவெகவில் சீட் வாங்கிய மிஸ்ரா

    அவருக்கு தவெக தலைமை சீட்டும் வழங்கியது. எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கதாத தவெக இவரை தவெக சார்பில் போட்டியிட அனுமதித்தது. அதன்பிறகு தவெக நிர்வாகி போலவே மாறிய ஜெகநாத் மிஸ்ரா, விஜய்யின் ஆதரவு அலையால் கம்பம் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து எம்எல்ஏவாக மாறினார்.

    சுருளி அருவியில் சுத்தம்

    தவெக எம்எல்ஏவாக மாறிய ஜெகநாத் மிஸ்ரா அதன்பிறகு அடிக்கடி தொகுதியில் சில பணிகளை சேர்ந்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வந்தார். அந்த வகையில் அண்மையில் சுருளி அருவியில் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தம் செய்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்தாக கம்பத்தில் உள்ள குளத்தை ஜேசிபி மூலம் சுத்தம் செய்தார். இதற்கும் வரவேற்பு கிடைத்தது. அடுத்தடுத்து சில செயல்களை செய்தவர், நேராக தனது கட்சியையே தவெகவில் இணைத்தார். சென்னையில் பனையூரில் தனது கட்சியை கடந்த சனிக்கிழமை இணைத்தார்.

    Advertisement

    தோசை சாப்பிட்ட எம்எல்ஏ

    இந்த சூழலில் கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா வெளியில் இருந்து தோசை வாங்கி வந்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டு ரீல்ஸ் எடுத்ததாக திமுகவினர் விமர்சனம் செய்தனர். தோசை அம்மா தோசை!... இது ரீல்ஸ்க்காக தோசை! என்று திமுக கடுமையாக விமர்சித்தது. ஏனெனில் அம்மா உணவகத்தில் தோசை வழங்கப்படுவதில்லை - த.வெ.க எம்எல்ஏவுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார்கள்.


    அம்மா உணவகத்தில் தோசை

    இந்த விமர்னங்களுக்கு ட்விஸ்ட் தரும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கம்பம் அம்மா உணவகத்தில் தோசை சுட்டு வழங்கப்படுகிறதாம். . கம்பம் அம்மா உணவகத்தில் இட்லி, சப்பாத்தி, பொங்கல், வெரைட்டி ரைஸ் மட்டுமின்றி, தோசையும் சுட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தான் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா வாங்கி சப்பிட்டதாக விளக்கம் தந்துள்ளார்கள். அதேநேரம் தமிழ்நாட்டில் எங்குமே தோசை அம்மா உணவகத்தில் வழங்கப்படாத போது, கம்பம் அம்மா உணவத்தில் மட்டும் எப்படி தோசையும் வழங்கப்படுகிறது என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்கள். இந்த விவகாரம் தற்போதும் முடிவு பெறாமல் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

    Advertisement

    முல்லை பெரியாறு

    இது ஒருபுறம் எனில், அண்மையில் கம்பம் த.வெ.க. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா முல்லை பெரியாறு அணை குறித்து பேசியதும் சர்ச்சையானது. ஏனெனில் முல்லை பெரியாறு அணையின் தண்ணீரை 152 அடி அளவுக்கு நீர்மட்டத்தை உயர்த்த 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு களப்போராட்டங்களையும், சட்டரீதியாகவும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால் ஜெகநாத் மிஸ்ரா, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 133 அடியாக நிலைநிறுத்தி உபரிநீரை தமிழகப் பகுதி கண்மாய், அணைகளில் தேக்க வேண்டும் என்று கூறியது கடும் சர்ச்சையாகி உள்ளது.

    விவசாயிகள் எதிர்ப்பு

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் விவசாயிகள். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், 104 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் தமிழ்நாடு பயன்படுத்த முடியும். அந்த வகையி்ல் 7 டிஎம்சி நீரைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். எம்எல்ஏ கூறியதைப் போல 133 அடியில் நீரை நிலைநிறுத்தினால் 4.5 டிஎம்சி நீரை இழந்துவிடுவோம்.

    Advertisement

    தவறான கருத்து

    நீர்மட்டத்தை நிலைநிறுத்துவதில் ரூல்கர்வ் முறை முல்லை பெரியாறு அணையில் பின்பற்றப்படுகிறது. தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீர்தான் அதிகபட்சமாக எடுக்க முடியும். எனவே பருவமழையின்போது அணை பாதுகாப்பு கருதி குறைவான நீரையும், மற்ற காலங்களில் கூடுதலாகவும் தேக்கவும் முடியும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையின் நீர்மட்டம் குறித்த எம்எல்ஏ கருத்து ஏற்புடையதல்ல. மேலும் 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த பலரும் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். தொடர்ந்து சட்டப் போராட்டங்களை தமிழக அரசும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நீர்மட்டத்தை குறைப்பது போல வெளிவந்த எம்எல்ஏவின் கருத்து அதிர்ச்சியாக உள்ளது என்றார்.

    English Summary

    DMK members have been criticizing TVK MLA Jaganath Mishra from Cumbum for bringing dosas from outside to eat at the Amma Unavagam and filming a 'Reels' video there. They questioned where the MLA obtained the *dosa*, noting that dosas are not served at Amma Unavagams. However, amidst this criticism, a video has surfaced showing *dosas* being cooked and served at the Cumbum Amma Unavagam.