அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்.. அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்

  • தேனி: அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் துளசிங்கம் வலியுறுத்தியுள்ளார். நடுத்தர, சாமானிய மக்கள் தங்களின் குடும்ப தேவைக்கு 5 கிலோ, 10 கிலோ என்று வாங்கி வரும் நிலையில் இந்த வரி விதிப்பால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றும் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரிசி விலையை குறைக்கவும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

    Advertisement

    தேனியில்தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி நடந்தது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் துளசிங்கம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச்செயலாளர் மோகன், மாநில பொருளாளர் கணேச அருணகிரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டார்கள்.

    Advertisement

    பின்னர் மாநில தலைவர் துளசிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. அரிசி விலை தொடர்ந்து உயரும் என்று கணிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் எனில், 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் பேக்கிங் செய்யும் அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

    நடுத்தர, சாமானிய மக்கள் தங்களின் குடும்ப தேவைக்கு 5 கிலோ, 10 கிலோ என்று வாங்கி வருகிறார்கள். இந்த சூழலில் ஜிஎஸ்டி3 வரி விதிப்பால் அரிசி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரிசி விலையை குறைக்கவும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    Advertisement

    அரிசி ஆலைகளில் இருந்து எண்ணெய் ஆலைகளுக்கு அனுப்பும் தவிடுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், கால்நடைகளுக்கு அனுப்பும் தவிடுக்கு வரி விதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த குழப்பான வரிவிதி்ப்பால் அரிசி ஆலை வணிகத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுகிறது. எனவே 5 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.

    தமிழக அரசு நெல்லுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் (செஸ் வரி) வசூலிக்க வேண்டும். அரிசி ஆலை வணிகர்கள் விவசாயிகள்மிடம் நேரடியாகவும், வெளி மாநிலங்களில் இருந்தும் வாங்கும் நெல்லுக்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. வேளாண் விற்பனைக் கூடங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் உலர்த்தும் சாதனம் நிறுவ வேண்டும். அரிசி ஆலைகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்து பயன்படுத்த 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தெரிவிக்க இருக்கிறோம்" என்றார்.

    Advertisement

    அரிசி விலை உயர்வு

    ஆந்​தி​ரா, கர்​நாடக மாநிலங்​களில் விளைச்​சல் குறைவு காரண​மாக அரிசி விலை தமிழ்நாட்டில் கிலோவிற்கு 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.மேலும் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. கடந்த ஜூன் மாதம் கிலோ ரூ.65-க்கு விற்​கப்​பட்ட பொன்னி அரிசி தற்போது கிலோ ரூ.80 முதல் 85 வரை விற்கப்படுகிறது. பாபட்​லா, ஆர்​என்​ஆர் ரக அரிசி ரூ.55-லிருந்து ரூ.70 ஆகவும், சீரக சம்பா ரூ.120-லிருந்து ரூ.200 ஆகவும் கடந்த மாத இறுதியில் உயர்ந்​து இருந்தது. தற்போது அரிசி விலை மேலும் உயர்ந்து வருகிறது.

    English Summary

    Thulasingam, State President of the Rice Mill Owners' Federation, has urged for an exemption from the 5% GST to curb the rise in rice prices.