ஊரே சிரிக்குது..ஓடுகாலி இசக்கி சுப்பையா! மீண்டும் எம்எல்ஏ பதவி ஒரு கேடா? நெல்லையில் முளைத்த போஸ்டர்!

  • நெல்லை: தனது பதவியை ராஜினாமா செய்ததை திரும்ப பெறுவதாகவும், தான் எம்.எல்.ஏ.வாக பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ராஜினாமாவை இசக்கி சுப்பையா வாபஸ் பெற முடியாது. ராஜினாமாவை திரும்ப பெற விதி இல்லை. அம்பை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு, வாபஸ் பெற முடியாது என சட்டப்பேரவை செயலகம் கூறிவிட்டது. இந்நிலையில், "மீண்டும் எம்.எல்.ஏ பதவி ஒரு கேடா?" என இசக்கி சுப்பையாவை கண்டித்து நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர்களால் பரபரப்பு எழுந்துள்ளது.

    Advertisement

    கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் சென்ற அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா, பெருந்துறை தொகுதியின் ஜெயக்குமார், தாராபுரம் தொகுதியின் சத்தியபாமா உள்ளிட்டோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

    Advertisement

    சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நால்வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    அதிமுக

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக சார்பில் 25 எம்எல்ஏக்கள் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதை அடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு கோரிக்கை விடுத்தது, பின்னர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி அந்த மனுவை வாபஸ் பெற்றார்,

    Advertisement

    தகுதி நீக்க நடவடிக்கை

    இதற்கிடையே கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்ததோடு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது. திடீரென அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அதே நாளில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

    இசக்கி சுப்பையா

    இந்த நிலையில் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாகவும் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை அம்பாசமுத்திரம் எம்எல்ஏவாக தான் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் தொகுதியில் எம்எல்ஏ இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் தொடர்ந்து எம்எல்ஏவாக பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக மனு ஒன்றினை தாக்கல் செய்தார் இசக்கி சுப்பையா.

    Advertisement

    சென்னை உயர்நீதிமன்றம்

    இதற்கிடையே பதவி விலகலை வாபஸ் பெறக்கூடிய எம்.எல்.ஏவாக தொடர அனுமதி கோரியின் தாக்கல் செய்த இசக்கி சுப்பையாவின் மனதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும் இசக்கி சுப்பையாவுக்கு பெரும் பின்னடைவைத் தரும் வகையில் ராஜினாமாவை திரும்பப் பெரும் விதி இல்லை எனவும், ஏற்கனவே அம்பாசமுத்திரம் தொகுதி காலியான தொகுதி என அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு என சட்டப்பேரவை செயலர் அலுவலகமும் கூறியுள்ளது.

    நெல்லையில் போஸ்டர்

    இந்நிலையில், "மீண்டும் எம்.எல்.ஏ பதவி ஒரு கேடா?" என இசக்கி சுப்பையாவை கண்டித்து நெல்லையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நெல்லை நகர், புறநகர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் "அம்பை தொகுதி மக்களின் தீர்ப்பை மதிக்காத இசக்கி சுப்பையாவே, மீண்டும் எம்.எல்.ஏ பதவி ஒரு கேடா?" என கேள்வி எழுப்பி, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தொண்டர்கள் பெயரில் நெல்லை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English Summary

    Posters mocking former AIADMK MLA Isakki Subbiah appear in Tirunelveli amid his attempt to withdraw his resignation.