போய் வரவா... விடைபெற்றது மாஞ்சோலை எஸ்டேட்! தேயிலைக் காட்டுக்குள் தேய்ந்த வரலாறு! மறக்க முடியுமா?

  • திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த மாஞ்சோலை எஸ்டேட் நிலங்கள் அனைத்தும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் பல வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ள மாஞ்சோலை எனும் வரலாற்று பொக்கிஷம் தனது பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது.

    Advertisement

    திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சிங்கம்பட்டி வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் அமைந்துள்ளது.

    Advertisement

    அங்கு நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்று மும்பையைச் சேர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் தேயிலைத் தோட்டங்களை அமைத்தது. தற்போது அப்பகுதி பாதுகாப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுபடி அந்நிறுவனம் வெளியேறியது.

    இதனால் அங்கு வாழும் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதனை அதனை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. முன்னதாக, கடந்த 1929-ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு மொத்தம் 8,373.57 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்தக் குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

    Advertisement

    முதற்கட்டமாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 8,152.13 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய 221.44 ஏக்கர் நிலப்பரப்பில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புகள், தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் இதர கட்டுமானங்கள் இருந்ததால், அந்த நிலம் மட்டும் நிறுவனத்தின் வசம் இருந்து வந்தது.

    இந்நிலையில், கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மீதமுள்ள 221.44 ஏக்கர் நிலத்தையும் 15 நாட்களுக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் மற்றும் வனஉயிரினக்காப்பாளர் நோட்டீஸ் வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று (11.07.2026) அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் முன்னிலையில், நோட்டரி பப்ளிக் சாட்சியத்துடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

    Advertisement

    இதில் பிபிடிசிஎல் நிறுவன சட்ட மேலாளர் மற்றும் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் எஞ்சிய 221.44 ஏக்கர் நிலமும் முறைப்படி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகையில் இருந்த ஒட்டுமொத்த 8373.57 ஏக்கர் நிலப்பரப்பும் தற்போது முழுமையாக தமிழ்நாடு வனத்துறையின் நேரடி கட்டுப்பாடு மற்றும் உடைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், திருநெல்வேலி - தென்காசி மாவட்டத்தின் அடையாளமாக இருந்த மாஞ்சோலை எஸ்டேட் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துள்ளது.

    English Summary

    The historic Manjolai Estate has officially been handed over to the Tamil Nadu Forest Department following Supreme Court directions.