127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா? விஜய்க்கு அப்பாவு கேள்வி

  • நெல்லை: இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா? என்று திமுக நிர்வாகியும், முன்னாள் சபாநாயகருமான அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?

    Advertisement

    கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி 41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.

    Advertisement

    தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய CM sir, தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா? CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும் !" இவ்வாறு கூறியுள்ளார்.

    முன்னதாக அப்பாவு இன்று காலை வெளியிட்டிருந்த இன்னொரு பதிவில் கூறுகையில், "த.வெ.க அரசு பொறுப்பேற்ற நாள் முதல், இன்று வரை எதிர்க்கட்சிகளை பழிவாங்க பொய்யான வழக்குகள் பதிவு செய்வதும், எதிர்க்கட்சிகளை அழித்து ஒழித்து சுக்குநூறாக்கி அக்கட்சி எம்.எல்.ஏக்களை தனக்கு ஆதரவாக கொள்முதல் செய்வதிலுமே ஆர்வம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மின்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை உட்பட அனைத்து துறை பணிகளும் முடங்கியுள்ளது.

    Advertisement

    இந்த அரசின் அமைச்சர்களும் த.வெ.க நிர்வாகிகளும் கால் போன போக்கிலும், மனம் போன போக்கிலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அனைத்து துறை அலுவலகங்களுக்கும் சென்று ரீல்ஸ் எடுப்பதையே வாடிக்கையாக கொண்டு செயல்படுவது வெட்கக் கேடானது. அதோடு முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பத்திரிகையாளர்களை அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்ட ஒழுங்கு சரியில்லை, தொடர்ந்து மின்தடை அரசு பணிகள் அனைத்தும் தொடர்ந்து முடங்கி கிடப்பதையேல்லாம் த.வெ.க அரசு வேடிக்கை பார்பதையும், ரீல்ஸ் எடுப்பதையும் நிறுத்தி விட்டு மக்கள் பணியை எப்போது தொடங்க உள்ளார்கள்?" இவ்வாறு அப்பாவு அந்த பதிவில் கூறியுள்ளார்.

    English Summary

    MK Stalin defeated TVK in 127 constituencies: former dmk mla Appavu questions chief minister Vijay