வாய்ப்பில்லை ராஜா.. தாக்குப் பிடிக்காது தவெக! விஜய் முகத்தில் தோல்வி பயம்! விடாமல் அடிக்கும் நயினார்

  • நெல்லை: தற்போது இடைத் தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் தவெக மிகவும் பின் தங்கி உள்ளது எனவும், தவெக ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கு வாய்ப்பில்லை ராஜா எனக் கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சமூக வலைதளத்தை கட்டுபாட்டில் வைக்கவேண்டும் இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனைகள் நாளடைவில் வரும் எனவும் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " தற்போது இடைத் தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் 2 தொகுதிகளிலும் தவெக மிகவும் பின் தங்கி உள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. முதல்வருக்கு சட்டமன்றத்திலும் பேசத் தெரியவில்லை. பிரச்சாரத்திலும் பேசத் தெரியவில்லை. பிரச்சாரத்தில் மாற்றி மாற்றி பேசி வருகிறார். தவெகவை திமுக என்கிறார்; பாஜகவையும் திமுக என்கிறார்.

    அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை. உருவகேலி செய்து ஒருவரை பேசுவது மிகவும் தவறு. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை. அவர் ஒருவரை உருவ கேலி செய்யும் நோக்கத்தில் பேசினால் அது தவறு. காங்கிரஸ் தோல்வி அடைந்தால் வாக்கு எந்திரம் குறித்த ஒரு செய்தியும் வெற்றி பெற்றால் ஒரு செய்து சொல்வது மிகவும் தவறு.

    Advertisement

    எஸ்.ஐ.ஆர் நீக்கம் கொளத்தூர் தொகுதியில் நடந்தது. ஆனால் திமுக எந்த குறையும் சொல்லவில்லை. ராகுல் காந்தி பொய்யாகவே எல்லாம் சொல்லி வருகிறார். எஸ்.ஐ ஆர் வரப்போய் தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. இன்ஸ்டாவில் பொய்யை திரும்ப திரும்ப தவெக சொல்லி ஆட்சி அமைத்தது. அதனை இப்பவும் மீண்டும் மீண்டும் சமூக வலைதளத்தில் தவெகவினர் பொய் சொல்லி வருகிறார்.

    சமூக வலைதளத்தை கட்டுபாட்டில் வைக்கவேண்டும் இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்சனைகள் நாளடைவில் வரும். தண்ணீருக்காக தான் உலகப்போர் வரும் என சொல்வார்கள். ஆனால் சமூக வலைதளத்தை கட்டுபாட்டில் வைக்கவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும். சின்னக்குழந்தைகளை எல்லாம் சமூக வலைதளத்தை தவெக பயன்படுத்தியது.

    Advertisement

    திருப்பரங்குன்றம் அவதாரத்தில் முந்தைய அரசு எடுத்த நிலைப்பாடு காரணமாக தான் ஆட்சியை இழந்தார்கள். ஐந்து ஆண்டுகள் திமுக ஆட்சியை நடத்தியது ஆனால் தவெக ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவதற்கு வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை ராஜா" என தெரிவித்தார்.

    English Summary

    BJP leader Nainar Nagendran criticises Vijay and TVK, claiming the party trails in both bypoll constituencies and questioning its government’s tenure.