மனோன்மனியம் பல்கலை. பட்டமளிப்பு.. அமைச்சர் புறக்கணிப்பு! விழாவில் திடீர் சலசலப்பு.. என்ன நடந்தது?

  • சென்னை: நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்தில் பாடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதே போன்று முனைவர் பட்டம் பெற இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.

    Advertisement

    நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் அர்லேகர் பங்கேற்கும் இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    Advertisement

    இந்த சூழலில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதான் புறக்கணித்துள்ளார். அதேபோல் இன்று முனைவர் பட்டம் பெறுவதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் பங்கேற்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்து இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே, பட்டமளிப்பு விழாவில் வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது 871 பேர் முனைவர் பட்டம் வாங்க உள்ள நிலையில், 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் கையால் பட்டம் வழங்குவார் என்ற அறிவிப்பால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். விழாவில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் ஆளுநர் அர்லேகர் பட்டம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

    Advertisement

    873 பேருக்கு பட்டம் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் கையால் பட்டம் வழங்கப்படும் என கூறப்பட்டதால் பட்டம் பெற இருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்காக தான் நாங்கள் இந்த பட்டமளிப்பு விழாவிற்கே வருகை தந்து இருந்தோம். இப்போது ஆளுநர் கையால் பட்டம் வழங்கப்படாது என கூறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது, அதிர்ச்சியாக இருக்கிறது..

    நாங்க எல்லாரும் ஆளுநர் கையால் பட்டம் வாங்குவது போல் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று தான் ஆசையோடு, கனவோடு இருந்தோம்.. இன்று இப்படி கூறியிருப்பது கவலையும், ஏமாற்றமும் அளிப்பதாக கூறினர். இதனால் பட்டமளிப்பு விழாவில் கூச்சல் குழப்பங்கள் இருந்து வந்தது. நீண்ட நேர குழப்பங்களுக்கு பிறகு அனைவருக்கும் ஆளுநர் கையால் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    முதலில் தங்க பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாக பட்டம் வழங்குவார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் தற்போது, மாணவர்கள் எதிர்ப்பால் அனைவருக்கும் ஆளுநரே பட்டம் வழங்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. வரிசையாக பெயர் சொல்லி அழைக்கும் போது பட்டம் வாங்க மேடைக்கு வரலாம் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பட்டமளிப்பு விழா நடந்து வருகிறது.

    English Summary

    Nellai Manonmaniam University: Manonmaniam Sundaranar University Convocation: Higher Education Minister Viswanathan Boycotts Event. Boycott in protest against the 'Tamil Thai Vazhthu' being sung third in the order of proceedings. DGP Mahesh Kumar Aggarwal, who was set to receive his doctorate, also did not participate.