நெல்லையில் பெட்ரோல் போட வந்த சொகுசு காருக்குள் சிக்கிய குழந்தை.. அடுத்த நொடியே ட்விஸ்ட்

  • திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் போட வந்த சொகுசு காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

    Advertisement

    நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்சாரி. இவர் தனது குடும்பத்தினருடன் சொகுசு காரில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அவரது ஒரு வயது குழந்தை காருக்குள் இருந்துள்ளது. அன்சாரி காரில் இருந்து இறங்கி பெட்ரோலுக்கான பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, கார் திடீரென உள்புறமாகப் பூட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அன்சாரி, காருக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்கக் கடுமையாகப் போராடினார். காரின் சாவியை வைத்து கதவைத் திறக்க முயற்சி செய்ததுடன், பல்வேறு வழிகளில் காரைத் திறக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் காரின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, கதவு திறக்கப்பட்டது. தொடர்ந்து காருக்குள் சிக்கியிருந்த ஒரு வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
    பெற்றோர் பெட்ரோல் நிரப்ப வந்த காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கிய சம்பவத்தால், நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பெட்ரோல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    English Summary

    Rescuers saved a one-year-old child who was accidentally locked inside a luxury car at a petrol pump in Tirunelveli after a one-hour struggle.