அம்பை இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மகனுக்கு சீட்? முக்குலத்தோர் வேட்பாளரை நிறுத்தும் திமுக.. ரேஸில் யார்?

  • நெல்லை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுக சார்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், கிரஹாம்பெல் ஆகியோர் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சீமான் களமிறங்குவதால், திமுக தரப்பில் முக்குலத்தோர் வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இவரை பொது வேட்பாளராக நிறுத்த திமுக மற்றும் அதிமுகவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஆனால் தவெகவை வீழ்த்த முடியாத சக்தியாக உருவகப்படுத்திவிட திமுக, அதிமுக விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    இரு கட்சிகளுமே தங்களுடன் கூட்டணி வந்தால், முடிவு எடுக்கலாம் என்று கூறிவிடும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பணிகளை தொடங்கிவிட்டன. ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அம்பை தொகுதி நிர்வாகிகளும், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தி இருந்தனர்.

    அப்போதே ஸ்டாலின் தரப்பில், சிறந்த வேட்பாளர்களை பரிந்துரை செய்ய நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி இருந்தார். கடந்த முறை அம்பாசமுத்திரம் தொகுதியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு விட்டுக் கொடுத்திருந்தது. காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட விபி துரை 55,344 வாக்குகளை பெற்று இருந்தார்.

    Advertisement

    அதிமுக சார்பாக போட்டியிட்ட இசக்கி சுப்பையா 65,589 வாக்குகள் பெற்று, 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தவெக சார்பாக போட்டியிட்ட ராஜகோபால் 53,611 வாக்குகளும், நாதக சார்பாக போட்டியிட்ட சிவசங்கரன் 14,906 வாக்குகளும் பெற்றனர். 10 ஆயிரம் வாக்குகளே வித்தியாசம் என்பதால், அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக தீவிரமாக களமாடும் என்று பார்க்கப்படுகிறது.

    நேரடியாக திமுக வேட்பாளர் களமிறக்கப்படும் பட்சத்தில் அது கூடுதல் சாதகம் தான். அதேபோல் சீமான் களமிறங்குவதால், திமுக முக்குலத்தோர் சமூக வேட்பாளரை தேர்வு செய்யக்கூடும். இதனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் அம்பை நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதேபோல் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் கிரஹாம்பெல் போட்டியிட்டால், அது ஆவுடையப்பன் தரப்புக்கு எதிராக இருக்கும். அதேபோல் கிரஹாம்பெல் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு அம்பை தொகுதியில் செல்வாக்கு குறைவு என்பதால், ஆவுடையப்பன் மகன் பிரபாகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன.

    2006 சட்டசபைத் தேர்தலுக்கு பின் 3 முறை அம்பை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் ஆவுடையப்பன். வயதாகிவிட்டதோடு, திமுகவும் இளம் வேட்பாளர்களை களமிறக்கவே விரும்புகிறது. இதனால் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் களமிறக்கப்பட்டால், தவெக தரப்பில் களமிறங்கும் இசக்கி சுப்பையாவுக்கு மிகப்பெரிய போட்டி அளிக்க முடியும்.

    Advertisement

    ஓ.பி.ரவீந்திரநாத் களமிறக்கப்பட்டால், திமுகவில் யாருமே இல்லையா என்ற கேள்வி வரும். புதிய தொகுதி என்பதால், திமுகவினரை அனுசரித்து பணியாற்றுவதும் கடினமாக இருக்கும். இதனால் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் ரேஸில் முந்துவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் வேட்பாளர் தேர்வில் உதயநிதி ஸ்டாலினின் முடிவும் முக்கியத்துவம் பெறும் என்று பார்க்கப்படுகிறது.

    English Summary

    Seeman Factor Drives DMK Strategy: Mukkulathor Candidates Under Consideration for Ambai Bypoll