திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சூப்பர் அதிரடி சம்பவம் நடந்துள்ளது.. இங்கு நடத்தப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையினரின் துரித செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் புதிய மைல்கல்லாக பார்க்கப்பட்டு வருகிறது.. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, தமிழ்நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது
தமிழ்நாடு போலீஸ் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை என்ற சூப்பர் திட்டத்தை துவக்கியிருக்கிறது.. இந்த படை துவங்கியதில் இருந்தே, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மின்னல் வேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஜூலை 3 முதல் 9ம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டுமே, மாநிலம் முழுவதும் 371 புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு, 25 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. அதேபோல காணாமல் போன 7 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுடன், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்கள் என மாநிலம் முழுவதும் 3,882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ள இப்படை, சமூகத்தின் அனைத்து தரப்பினரிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கத் துரிதமாகவும், அர்ப்பணிப்புடனும் களப்பணியாற்றி கொண்டிருப்பதை மறுக்க முடியாது திருநெல்வேலி பஸ் மாணவி இதோ நேற்றைய தினமும் திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களில் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள வெறும் 5 நிமிடத்தில் அதிரடி காட்டி சுற்றிவளைத்து பிடித்துள்ளது சிங்கப்பெண் படை. நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.. மாலையில் ஜங்ஷன் பகுதியில் இருந்து டவுன் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அதே பஸ்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், அந்த மாணவிக்கு ஆபாசமாகச் சைகை காட்டி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மாணவி, கொஞ்சமும் யோசிக்காமல் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தன்னுடைய செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். மாணவியின் அழைப்பைப் பெற்ற அடுத்த 5 நிமிடங்களில், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பஸ்ஸை வழிமறித்து நிறுத்தி, அதிரடியாக பஸ்ஸிற்குள் ஏறி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், மாணவிக்கு ஆபாச சைகை காட்டிய நபர், நெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் செல்வ மணிகண்டன் (வயது 24) என்பது தெரியவந்தது. சந்திப்புப் பகுதியில் வேலை பார்த்து வந்த இவர், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் செல்வ மணிகண்டனை மடக்கிப் பிடித்து, நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இப்போது மணிகண்டன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை ஜெயலில் அடைத்துள்ளனர். இதுபோலவே விழுப்புரத்திலும் ஒரு அதிரடி நடந்துள்ளது.. விழுப்புரத்தில் சிங்கப்பெண் சிறப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.. அந்த படையில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடமே, இளைஞர் ஒருவர் ஆபாசமாக பேசியிருக்கிறார்.. அப்போது அந்த நபர் மதுபோதையில் இருந்துள்ளார்.. விசில் அடித்து கொண்டே, சிங்கப்பெண் போலீசிடம் ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.. அதற்கு பிறகுதான் அவரை பிடித்து விசாரித்ததில், அவரது பெயர் திலீப்குமார் என்பது தெரியவந்துள்ளது.. இப்போது திலீப்குமாரும் ஜெயிலில் உள்ளார்.. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் படை பெண் போலீஸிடமே இளைஞர் அத்துமீறி நடந்துகொண்ட இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பெண் அதிரடிப்படை
5 நிமிடத்தில் சிக்கிய ஆசாமி
விழுப்புரம் எதிர்பார்க்காத சம்பவம்