சின்னப் பயலுக சகவாசம்..குடிக்கும் போது குழம்பிய மனம்! தென்காசி மகேந்திரனுக்கு இது தேவையா? தனியான தலை

  • தென்காசி: கடையநல்லூரில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்து தலையை 25 கிலோமீட்டர் தூரம் உள்ள சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் காவல் நிலையம் எதிரில் 4 பேர் புதைத்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறார்கள் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான ஒரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், புதைக்கப்பட்ட இளைஞரின் தலையை மீட்டுள்ள போலீசார் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை பகுதியைச் சேர்ந்த இளைஞர் மகேந்திரன் (30). இவருக்கு குழந்தை இல்லை. இவர் அதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், கடந்த 6-தேதி மகேந்திரன் தனது மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் மகேந்திரனின் மனைவி சேர்ந்தமரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    தென்காசி கொலை

    இதனையடுத்து ஆள் மாயம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மகேந்திரனின் இருசக்கர வாகனம் கடையநல்லூர் அட்டைகுளம் பகுதியில் போலீசாரார் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சேர்ந்தமரம் போலீசார் மகேந்திரன் காணாமல் போனது குறித்து விசாரனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே கடைசியாக மகேந்திரனுடன் பேசியதாக சந்தேகத்தின் பேரில் 3 சிறார்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    Advertisement

    கடையநல்லூர்

    அதில் 3 சிறார்கள் மற்றும் 23 வயது இளைஞர் ஒருவருடன் சேர்ந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பாழடைந்த அன்னச்சத்திரத்தில் உள்ள சிறிய கிணற்றின் அருகே மகேந்திரனின் தலை துண்டித்து கொலை செய்து விட்டு, உடலை மட்டும் கல்லில் கட்டி கிணற்றில் போட்டதாகவும், தலையை வேறொரு பகுதியில் புதைத்ததாகவும் காவல்துறையினர் நடத்திய விசாரனையில் தெரிவித்துள்ளனர்.

    துண்டிக்கப்பட்ட தலை

    இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் காவல்துறையினர் கிணற்றில் கிடந்த மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், துண்டிக்கப்பட்ட தலையை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் கொலை செய்யப்பட்ட மகேந்திரனின் தலையை புதைத்து வைத்ததாக குற்றவாளிகள் அளித்த தகவலின் பெயரில் புளியங்குடி டிஎஸ்பி நமசிவாயம் தலைவையில் தென்காசி தாசில்தார் ஹரிஹரன் முன்னிலையில் குற்றவாளியை குற்றாலத்திற்கு அழைத்து சென்றனர்.

    Advertisement

    ஓரினச்சேர்க்கை

    அங்கு குற்றாலம் காவல் நிலையம் எதிரில் உள்ள கலைவாணர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணிற்கு அடியில் இருந்து கடையநல்லூரில் கொலை செய்யப்பட்ட மகேந்திரனின் தூண்டிக்கப்பட்ட தலை தோண்டி எடுக்கப்பட்டது. இக்கொலை சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், ஓரினச்சேர்க்கை காரணமாகவும் அதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    கொடூர கொலை

    இது தொடர்பாக போலீசாரிடம் அந்த சிறுவர்கள் அளித்த வாக்குமூலத்தில் மகேந்திரனுக்கும் மேலக்கடை வன்முறை சேர்ந்த ஒரு சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே அந்த சிறுவனை மது அருந்தலாம் என மகேந்திரன் அழைத்துச் சென்றிருக்கிறார். இதற்கிடையே சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு மகேந்திரன் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் மற்றொரு சிறுவனை செல்போனில் அழைத்துள்ளார். பின்னர் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து மகேந்திரனுடன்சண்டை போட்ட போது அவர்களை தாக்கியுள்ளார்.

    Advertisement

    போலீஸ் விசாரணை

    இதனை தொடர்ந்து மேலும் ஒரு சிறுவனும், 23 வயது நபரும் வந்து மகேந்திரனை கடுமையாக தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாமல் மகேந்திரன் மயங்கி விழுந்த நிலையில் கத்தி மற்றும் கயிறு வாங்கி வந்து அவரது தலையை தனியாக துண்டித்துள்ளனர். பின்பு உடலை கிணற்றில் கல்லை கட்டி தள்ளிவிட்டு தலையை ஒரு பையில் எடுத்துச் சென்று குற்றாலம் அருகே புதைத்ததாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தலைமரமான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

    English Summary

    Police recover missing man's severed head in Tenkasi murder case; three juveniles detained and one suspect remains absconding.