திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி. மாவட்டத்தை சேரந்தவர்கள் சுஷ்மிதா - ஆகாஷ்.. இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.. நேற்று நெல்லிக்காய் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளார் ஆகாஷ்.. அப்போதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் என்றாலும், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் இப்படியான வன்முறை சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் ஆகாஷ்.. நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா.. இருவரும் கல்லூரியில் படித்தபோதே காதலித்து வந்தனர்.
ஆகாஷுக்கு 23 வயது. சுஷ்மிதாவுக்கு 21 வயது. இருவரும் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். 2 பேருமே வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், காதலித்து வந்த காலத்திலேயே சுஷ்மிதாவின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகும் அந்த எதிர்ப்பு தொடர்ந்துள்ளது. அதனால் திருமணம் முடிந்து கடந்த 3 மாதங்களாக ஆகாஷும் சுஷ்மிதாவும் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆகாஷ் அங்குள்ள நெல்லிக்காய் தோட்டத்தில் நெல்லிக்காய் பறிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சுஷ்மிதாவின் பெற்றோருக்கும், தம்பதிக்கும் இடையே கடந்த 3 மாதங்களாகவே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இல்லை என கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்துகொண்டதால் குடும்பத்தினர் தொடர்ந்து அதிருப்தியில் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு சுஷ்மிதாவின் அப்பா முருகன் அரியநாயகிபுரத்தில் இருந்து பைக்கில் சிவகாமிபுரத்திற்கு வந்துள்ளார். மகள் வசித்து வந்த வீட்டின் வாசலில், பைக்கை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்... நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பா தன்னுடைய வீட்டுக்குள் வந்து நிற்பதை பார்த்ததுமே சுஷ்மிதாவுக்கு தலைகால் புரியவில்லை.. தன்னுடைய காதல் திருமணத்தை அப்பா ஏற்றுக்கொண்டுவிட்டார் போலும், 3 மாத காலமாக பேசாமல் இருந்ததால், தன்னை பார்க்க ஆசையாக வந்திருக்கிறார் என்றும் சுஷ்மிதா குஷியில் திளைத்தார்.. ஆனால், அடுத்த சில நொடியிலேயே, முருகன் கையோடு கொண்டு போயிருந்த அரிவாளால் ஆகாஷை சரமாரியாக தாக்கியுள்ளார்... இதில் ஆகாஷின் தலை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியிருக்கிறது.. இதைப்பார்த்து அலறி தடுக்க முயன்ற சுஷ்மிதாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது.. எதிர்பாராமல் நடந்த இந்த திடீர் தம்பதி 2 பேருமே அலறி துடித்தனார்கள்.. அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் முருகன் அங்கிருந்து பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷையும் காயமடைந்த சுஷ்மிதாவையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 2 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சுஷ்மிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், ஆகாஷ் சீரியஸாக இருக்கிறாராம்.. ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட மகளையும், மருமகனையும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததாக கூறப்படும் தந்தையே வீட்டிற்குள் சென்று இருவரையும் தாக்கிய சம்பவம் சிவகாமிபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற முருகனை பாவூர்சத்திரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், ஆணவக்கொலைகளும், இதுபோன்ற வெட்டு-குத்து சம்பவங்களும் அதில் புதிய விவாதத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. விரைவில் இடைத்தேர்தலும் வரவுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகள் எழும் வகையிலான சம்பவங்கள் தவெக ஆட்சிக்கு நிச்சயம் அரசியல் ரீதியாக சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது...!!திருநெல்வேலி காதல் தம்பதி
நெல்லிக்காய் தோட்டம்
நெல்லை ஆகாஷ்
துள்ளிய சுஷ்மிதா
திருநெல்வேலி, தென்காசி பயங்கரம்