திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஒரு வருடமாக ஒரு பெண்ணை காணவில்லை.. சம்பவத்தன்று மகளை பார்ப்பதற்காக பெற்றோர் வந்துள்ளனர்.. அப்போது அந்த வீட்டில் ஏதோ சரியில்லை என்பது மட்டும் அவர்களுக்கு தெரியவந்தது. உடனே போலீசுக்கு ஓடினார்கள்.. இப்போது ஒரு வருடத்துக்கு போலீசாரின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதியும் காதலித்து கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், மகளைப் பார்க்க வந்த அமராவதியின் பெற்றோர் வந்திருக்கிறார்கள்.. மகள் வீட்டில் இல்லாததைப் பார்த்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர்.. அதற்கு அவர்கள், ஒரு வருடத்துக்கு முன்பேயே அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்துவிட்டதாக சொன்னார்கள்.. இதனால் அதிர்ந்து போன பெற்றோர், அமராவதியின் கணவர் மகாராஜனுக்கு, போன் செய்து மகள் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு மகாராஜன், "அமராவதி என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு கோபித்து கொண்டு போய்விட்டாள், எங்கே போனாள் என்று எனக்கு தெரியாது" என்றாராம்... இதை கேட்டதும் பெற்றோர் குழப்பமடைந்தனர்.. மருமகன் சொன்ன பதிலிலும் அமராவதியின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது.. அதனால் அமராவதியின் அம்மா சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதலில் அமராவதி எங்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய போலீசார், அவரது கணவர் மகாராஜனின் செல்போன் அழைப்பு விவரங்களையும் சேகரித்தனர். அதை வைத்து, மகாராஜனின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, மகாராஜனை அழைத்து விசாரித்தனர். இதற்கு பிறகுதான் மகாராஜன் உண்மையை சொன்னார்.. "அமராவதியுடன் கல்யாணமாகி, 2 மகன்கள் எனக்கு உள்ளனர்.. கடந்த 2024-ம் ஆண்டு என்னுடைய அத்தை மகளான அகிலா என்ற 23 வயது பெண்ணை 2வதாக செய்து கொண்டேன். இந்த 2வது கல்யாணத்துக்கு அமராவதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.. அதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.. அதற்கு பிறகுதான் அமராவதியை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த வருடம் மே மாதம், நாங்கள் வேலை செய்யும் கங்கைகொண்டான் சிப்காட் அருகே உள்ள பாப்பாங்குளம் விலக்கு பகுதியிலுள்ள கல்குவாரிக்கு அமராவதியை அழைத்து சென்றேன்.. அங்கு கல்குவாரி பள்ளத்தில் அமராவதியை தள்ளிவிட்டு, அதன்பிறகு வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டேன்" என்றார் கூலாக.. இதைக்கேட்டதம் அதிர்ந்த போலீஸ், உடனடியாக அந்த கல்குவாரி பள்ளத்தில் தேடினார்கள்.. அப்போது அங்கு ஒரு சேலை, மனித மண்டை ஓடு மற்றும் எலும்புத் துண்டுகள் கிடைத்தன. அவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.. இவைகளை தடய அறிவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஒரு வருடமாக அமராவதி எங்கே போனார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், மகளைப் பார்க்க வந்த பெற்றோரின் சந்தேகம் போலீஸ் விசாரணைக்கு வழிவகுத்தது.. அந்த விசாரணையில்தான், இப்படியொரு பயங்கரம் வெளிவந்துள்ளது.. எனினும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்..!!!திருநெல்வேலி அமராவதி
மகாராஜன் செல்போன் சிக்னல்
கல்குவாரியில் அந்த சேலை