திமுகவுக்கு என்ன தான் பிரச்சனை.. மின் கொள்முதல் விவகாரம்.. கொதித்த வன்னி அரசு

  • கள்ளக்குறிச்சி: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களாகிறது. மின் கொள்முதல், விலைவாசி உயர்வு, அதிமுக எம்எல்ஏக்களிடம் பேரம் உள்ளிட்ட ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மின் கொள்முதலில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு என்ன தான் பிரச்சனை என்று அமைச்சர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.21க்கு வாங்கியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதற்கு பதில் சொல்லும் வகையில் எங்கள் அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். ஏன் மத்திய அரசிடம் வாங்கியுள்ளோம் என்பதையும் அவர்கள் சொல்லியுள்ளனர். ஒரே ஒரு விஷயம் தான். மின் வெட்டு இருந்தாலும் ஏன் மின்வெட்டு என்று கேட்கிறார்கள்.

    Advertisement

    மின்வெட்டு பிரச்சனை

    மின்வெட்டை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும், ஏன் இப்படி கொள்முதல் செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாங்கள் என்ன தான் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். மின் வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பது தானே அனைவரின் கோரிக்கை. கொள்முதல் பிரச்சனையா. மின் கட்டண உயர்வு பிரச்சனையா என்பதை நாம் பார்க்க வேண்டும். மின்வெட்டு இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம். இதுகுறித்து அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

    அதுவே திமுகவினருக்கு போதுமானது என்று நான் நினைக்கிறேன். விசிக மீதான எதிர்க்கட்சிகள், முற்போக்கு அமைப்புகளின் ஆலோசனைக்கு நன்றி. முதலமைச்சர் வழிகாட்டுதலில் அரசு நிர்வாகம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கட்சிக்காரர்களின் ஆதிக்கம் இருக்க கூடாது என்று சொல்லியுள்ளார். அதனால் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தினால், அதை நிறுத்திக் கொள்வது சரியாக இருக்கும். விலைவாசி குறைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

    Advertisement

    பாமக கூட்டணி நிலைப்பாடு

    பாமக நிலைப்பாட்டை எங்கள் தரப்பில் தெளிவுபடுத்திவிட்டோம். சாதியவாத பாமக, மதவாத பாஜகவுடன் எப்போதும் கூட்டணியில்லை என்பதே விசிகவின் நிலைப்பாடாக உள்ளது. பாஜக தொடர்ந்து தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. எல்.முருகனுக்கு பொறுப்பு கொடுத்து அந்த பிம்பத்தை மாற்ற நினைத்தனர். மிகுந்த வலியுடன் முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரை ஏன் ராஜினாமா செய்ய வைத்தனர் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும். இது பாஜகவின் தலித் விரோத போக்கு" என்றார்.

    English Summary

    Minister Vanni Arasu said that we gave clear explanation of electricity purchase. don't know what's wrong with DMK.