தென்னிந்தியா மட்டுமல்ல வட இந்தியாவிலும் விஜய்க்கு செம செல்வாக்கு.. ஐயூஎம்எல் அமைச்சர் ஷாஜகான்

  • திருநெல்வேலி: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து மொத்த நாட்டையும் தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தேசியளவில் இந்தியா கூட்டணியில் தவெக அங்கம் வகிக்கிறது. விஜய்யை தேசிய அரசியலில் முகமாக மாற்ற தவெகவினர் காய் நகர்த்துகின்றனர். இந்நிலையில் விஜயின் புகழ் தென்னிந்தியாவை கடந்து, வட இந்தியா வரை உள்ளதாக ஐயூஎம்எல் அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.

    Advertisement

    திருநெல்வேலியில் ஐயூஎம்எல் அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரியும். பாஜகவால் மெஜாரட்டி பெற முடியவில்லை. நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவால் பிரதமர் மோடியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியில் இப்போது தவெக கூட்டணி இணைந்துள்ளது.

    Advertisement

    வட இந்தியாவிலும் அவர் தான்

    தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தென்னிந்தியாவில் மட்டுமல்ல.. வட இந்தியாவிலும் முதலமைச்சர் விஜய்க்கு செல்வாக்கு உள்ளது. இந்தியில் போஸ்டர் அடித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பார்த்தால் தெரியும். தமிழகத்தில் நல்லது செய்தாலும் விமர்சனம் வரத்தான் செய்யும். அரசியலில் இது இயல்பானது. கர்நாடகா, கேரளாவில் அவரின் தாக்கம் அதிகமாக உள்ளது. அவரின் முகம் இந்தியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுவரை லஞ்சம் ஊழலற்ற ஒரு ஆட்சியை தமிழகத்தில் கேள்விபட்டுள்ளோமா. அவரை இந்தியளவு பிம்பமாக நாம் காட்ட வேண்டியதில்லை. மக்கள் அவரை விரும்புகிறார்கள். மக்கள் எடுத்து கொண்டு செல்கிறார்கள். அது 2029 நாடாளுமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும். அரசியலமைப்பு சட்டம் எதை விரும்புகிறதோ மதச்சார்பின்மை, நல்லிணக்கம், சமூக நீதி காக்கும் ஒரு நல்லரசு 2029 உருவாகும். அதில் ஐயூஎம்எல், தவெக, காங்கிரஸ் ஒன்றாக பயணிக்கும். 2029 தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி உருவாகும்.

    Advertisement

    2029 தேர்தலில் தாக்கம்

    எல்லாருக்கும் அவரவர் தலைவர் பிரதமராக வரவேண்டும் என்கிற விருப்பம் இருக்கத்தான் செய்யும். கூட்டணி அமையும்போது, கட்சி தலைவர்கள் கலந்து பேசி முடிவு செய்வார்கள். முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சரை பார்ப்பதில் விமர்சனம் தேவையில்லை. அரசு பணிக்காக சந்திப்பது இயல்பு. அன்றைக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் திட்டங்களை செயல்படுத்த பயணிப்பது அவசியம்.

    கூட்டத்திற்கு ஒரு அஜென்டா உள்ளது. அதைத்தான் கூட்டத்தில் பேச முடியும். சட்டமன்றத்திலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 25 ஆண்டுகளுக்கு இது தொடர வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 543 தொகுதிகளில் மாறுதல் இருக்க கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் திமுக மீண்டு வந்து பணி செய்வதற்கு நேரமெடுக்கும்" என்றார்.

    English Summary

    IUML Minister Shajahan said, CM Vijay not only fame in South India. He's very famous in North India too.