இடைத்தேர்தலில் போட்டியா.. விஜய் என்ன சொன்னார்.. இசக்கி சுப்பையா பகீர் தகவல்

  • திருநெல்வேலி: சென்னை சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இசக்கி சுப்பையா முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    திருநெல்வேலியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அக்டோபர் 9 ஆம் தேதி நாம் சந்திப்போம். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் நான் தோற்று போவேன் என்றா சொல்லுவார். வெற்றி பெறுவேன் என்று தான் சொல்லியாக வேண்டும். அதைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் சொல்கிறார். மக்கள், ஐயா திமுகவும் வேண்டாம்.. அதிமுகவும் வேண்டாம் என்று தவெகவுக்கு வாக்களித்தது எல்லாருக்கும் தெரியும்.

    Advertisement

    இரட்டை இல்லை எங்கு செல்கிறது

    தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் சில தொகுதிகளுக்கு வந்ததேற்கே பேரிடியாகிவிட்டது. அதற்கே இந்த நிலைமை ஆகிவிட்டது. எல்லா தொகுதிக்கும் அவர் வந்தால் நிலைமை வேறு மாதிரியாகிவிடும். புரட்சி தலைவர், அம்மாவுக்கு பிறகு பெயர், புகழ், பணம் சம்பாதித்துவிட்டு அரசியலுக்கு வந்தது விஜய் தான். அவர் பணம் சம்பாதிப்பதற்கு அரசியலுக்கு வரவில்லை. ஏற்கனவே சினிமாவில் சம்பாதித்துவிட்டு தான் வந்துள்ளார். அரசியலில் இருப்போர், தளபதியை விமர்சிப்போரின் பயோ டேட்டாவை எடுத்து பாருங்கள்.

    அவர் சம்பாதித்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளார். நானும் பணம் சம்பாதித்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளேன். முதலமைச்சரும் இதைத்தான் சொல்கிறார். அரசியலில் பணம் சம்பாதிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டில் உள்ளோம். எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்போம். என்னை உருவாக்கியது இரட்டை இலை. என்னை ஆளாக்கியது இரட்டை இலை தான். அதில் மாற்று கருத்து இல்லை. இன்றைக்கு அதிமுக, இரட்டை இலை எங்கே சென்று கொண்டிருக்கிறது.

    Advertisement

    தவெக வெற்றி பெறுவது உறுதி

    திமுகவை எதிர்ப்பதற்காக அதிமுக உருவாக்கப்பட்டது. ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் வந்துவிட்டேன் அதில் என்ன தப்பு. இன்றைக்கு முதலமைச்சர் விஜய் நூற்றுக்கு 300 முறை புரட்சி தலைவர், அம்மா வழியில் செயல்படுவதை உணர்த்துகிறார். அவருடன் செல்வதா அல்லது திமுக அதிமுகவுடன் செல்வதா. அது என்னால் முடியாது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கண்டு கொள்ள தேவையில்லை.

    இடைத்தேர்தலில் தவெக உறுதியாக வெற்றி பெறும். அதில் மாற்று கருத்தே இல்லை. முதலில் தவெக சார்பில் நான் தேர்தலில் நிற்பேனா என்பது தெரிய வேண்டும். யார் நின்றால் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது இரண்டாவது விஷயம். தவெக வெற்றி பெறும் என்பது மட்டும் உறுதி. யார் நின்றாலும் ஜெயிப்போம். இதுதான் பாயின்ட்" என்றார். அவரின் கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Isakki Subbaiya said TVK is certain to win the upcoming bypoll, while hinting that he could contest the election if the party chooses him.