திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கேஸ் கசிவு! 7 பேர் பலியான சோகம்! அமைச்சர் ஆய்வு!


  • திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிந்ததால் 45 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

    Advertisement

    பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் இன்று வேலைக்கு வந்தனர். அப்போது திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.

    Advertisement

    இதை அறியாமல் தொழிலாளர்கள் சுவாசித்தனர். அப்போது அவர்களில் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்து மயக்க நிலைக்கு சென்றனர். பலர் மூச்சுத்திணறலால் மயங்கினர். இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

    அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் விசாரணைக் குழு அமைத்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அது போல் இந்த விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை
    எடுக்கப்படும் என அமைச்சர் முகமது பர்வேஷ் எச்சரித்துள்ளார். மயக்கமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த தவெக அரசு உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Ammonia Gas Leak at a shrimp processing factory in Periyapalayam near Tiruvallur caused 45 people to faint, while six affected workers remain under intensive medical treatment.