தனுஷ் கட்சியில் வைகோ.. 3 மாதங்களில் மாற்றம்.. திண்டுக்கல் லியோனி தகவல்

  • திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாதளவுக்கு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 3 மாதங்களில் தனுஷ் கட்சியில் இணைந்து அவரை பாராட்டுவார் என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.

    Advertisement

    ஆவடியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய அந்தக் கட்சியின் நிர்வாகி திண்டுக்கல் லியோனி, "முதலமைச்சர் விஜய் உங்கள் உடனுள்ள கூட்டணி கட்சியினரை நம்பி இருக்கிறார். நாங்கள் எங்கள் உடலில் இருந்த கோமணத்தை கழற்றி போட்டோம். அதுதான் இன்றைக்கு உங்கள் பட்டு வேஷ்டி. புரிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் முகம் துடைப்பதற்கு வைத்துள்ள கர்சீப் தான், இன்று உங்கள் தோளில் உள்ள துண்டு. நாங்கள் கையில் வைத்திருந்த குச்சி தான் நீங்கள் அமர்ந்துள்ள நாற்காலி.

    Advertisement

    எங்கள் கோமணம் உங்கள் வேஷ்டி

    கூட்டணி கட்சியின் ஆட்சியில் இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொருவராக என்னடா என்று பார்க்கிறார்கள். என்றைக்கு வைகோ அண்ணன் தவெக கூட்டணியில் இணைந்தாரோ அன்றைக்கே முடிவு செய்துவிட்டேன். மேட்டர் சீக்கிரம் ஜிந்தாபாத் ஆகிடும்னு தெரிந்துவிட்டது. எங்கள் தலைவர் அறிவாலயத்தில் முடிந்துவிட்டது என்று கையை தான் காண்பித்தார். சட்டமன்றத்தில் முதலமைச்சர் அதை வேறு மாதிரி சைகை காட்டுகிறார்.

    எங்கள் தலைவர் பேசி முடித்துவிட்டோம் என்பதைத்தான் சைகயாக காட்டினார். அதைகூட சரியாக காட்ட தெரியாமல் முதலமைச்சர் வேறு மாதிரி சைகை செய்கிறார். உங்கள் தமிழ்நாட்டு மக்களை எல்லாம் தொடர்ந்து கழுத்தறுக்க போகிறேன். காத்திருங்கள் என்பதுதான் அர்த்தம். வருடத்திற்கு ஆறு சிலிண்டர் கிடைக்காது என்பதுதான் அர்த்தம். கூட்டணி கட்சிகள் எல்லாம் தவெகவுடன் இணைந்துள்ளன.

    Advertisement

    தனுஷ் கட்சியில் வைகோ

    வைகோ எழுதிய புத்தகத்தை வெளியடுவதற்கு முதலமைச்சர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார். போனால் அதுதான் நமக்கு கடைசி நிகழ்ச்சி ஆகிவிடும் என்பதால் வேண்டாம் என கூறிவிட்டார். இந்த பம்பரம் எந்த சாட்டை கட்டினாலும் சுற்றும் போல என அவர் சுதாரித்துவிட்டார். அதனால் இன்னும் 3 மாதங்களில் தனுஷ் கட்சியில் அண்ணன் வைகோ இருப்பார். உலகத்தில் உள்ள மிகச்சிறந்த தலைவராக தனுஷ் அவர்களை பார்க்கிறேன் என்று வைகோ கூறுவார்.

    இப்படி அவர் பேசினாலும் பேசுவார். உண்மையில் வைகோ மீது நான் மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு பேச்சாளரை என் வாழ்வில் இதுவரை நான் பார்த்ததில்லை. அவரின் பேச்சிற்கு நான் எல்லாம் அடிமை. ஆனால் அரசியலில் இப்படி ஒரு கேவலமான மனிதன், இப்படி ஒரு துரோகியை நான் பார்த்ததில்லை. துரோகி என்கிற வார்த்தையை சொல்வதற்கு மன்னிக்கவும்" என்றார்.

    English Summary

    DMK Dindigul Leoni said, MDMK Leader Vaiko will join Dhanush Party in 3 months. He will praise Dhanush as well.