திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி காப்பக சிறுமிகள் 4 பேர் பலி! ஊழியரும் சேற்றில் சிக்கி மரணம்

  • திருவண்ணாமலை: அரசு காப்பகத்தில் தங்கி இருந்த மாணவிகள் ஏரியில் குளிக்க சென்ற போது ஊழியர் மற்றும் நான்கு சிறுமிகள் என 5 பேர் ஏரி நீரில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் ஆணாய் பிறந்தான் கிராமத்தில் சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு என்ற அரசு காப்பகம் செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்த காப்பகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த அரசு காப்பகத்திற்கு பின்புறம் சமுத்திரம் ஏரி உள்ளது திருவண்ணாமலையில் பெய்த மழையினால் இந்த ஏரியில் தற்போது நீர் நிரம்பி உள்ளது.

    தீபாவளி பண்டிகை முடிவற்ற நிலையில் இன்று நண்பகல் அரசு காப்பகத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு சில சிறுமிகள் ஏரியில் இறங்கி குளித்துள்ளனர்.

    இதில் எதிர்பாராத விதமாக விஜயலட்சுமி (16), அல்ல (14), பூமிகா (13), வள்ளியம்மாள் (16) ஆகிய நான்கு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைப் பார்த்த காப்பாக ஊழியர் தேன்மொழி அவர்களை காப்பாற்ற ஏரியில் குதித்துள்ளார்.

    Advertisement

    எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கிய தேன்மொழியும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தகவலறிந்த திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் ஏரியல் இருந்த 4 சிறுமிகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

    சிறிதும் பாதுகாப்பின்றி எப்படி ஏரி நீரில் சிறுமிகளை விளையாட வைத்தார்கள் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள். மேலும் தற்போது ஆங்காங்கே மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் எதற்காக அவர்கள் எல்லாம் அங்கு அழைத்து செல்லப்பட்டார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.