ஏங்க எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா? வித்தை காட்டி ஜெயிச்ச விஜய்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி அட்டாக்!

  • திருவண்ணாமலை: விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் எம்ஜிஆர் ஆக ஆகி விட முடியாது எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் தான் எனவும், தவெக வெற்றி தற்காலிகமானது.. இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வித்தை மற்றும் கவர்ச்சியை காட்டி வெற்றி பெற்றுள்ளார் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    அண்ணா திமுக கொறடாவும் முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி தீவிர ஆதரவாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    Advertisement

    அப்போது பேசிய அவர்," தவெக வெற்றி தற்காலிகமானது. தமிழக வரலாற்றிலேயே எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. மதுராந்தகம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டது.

    லாட்டரி வித்தவங்க.. ப்ளாக் டிக்கெட் வித்தவங்க எல்லாம் அமைச்சர்! வைகோவின் விஸ்வாசம்! பரந்தாமன் சுளீர்

    அந்த பணத்தை டிபன் பாக்ஸில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரே தெரிவித்துள்ள தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலில் பணபலம் அதிகார பலத்தால் தவெக தற்காலிக வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ரூபாய் 50 கோடிக்கு விலை பேசி தவெக அமைச்சர்கள் வாங்கியுள்ளனர்.

    Advertisement
    எச்சரித்த உளவுத்துறை.. பாஜக ஸ்டைலில் தேடித்தேடி CJP இளைஞர்களை கைது செய்த விஜய் அரசு! அடக்குமுறை!

    ஆதவ் அர்ஜுனா நிர்மல் குமார் போன்றவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி வீட்டில் பதவிக்காக பல மணி நேரம் காத்திருந்தவர்கள். விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் எம்ஜிஆர் ஆக ஆகி விட முடியாது எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் தான். அதிமுக, திமுக போன்ற ஆட்சிக்காலத்தில் கூட இதுபோன்று தரம் கெட்ட அரசியல் செய்தது கிடையாது.

    பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது. அமைச்சர் ஆதார் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகிய இரண்டு அமைச்சர்களும் இணைந்து தவெகவை கபலிகரம் செய்து வருகின்றனர். இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வித்தை மற்றும் கவர்ச்சியை காட்டி வெற்றி பெற்றுள்ளார்.

    English Summary

    Agri Krishnamurthy criticises Vijay’s bypoll victory, calling it temporary and alleging money power and political glamour influenced the outcome.