திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்த பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு தனது இரு மகன்களுடன் வந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் கோவில்.
அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோருடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கி வழிபட்ட அவர், தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர். பின்னர் வைகுந்த வாயில் அருகே நின்று தீபமலையை வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். இதுவரை இங்கு அண்மையில் அனிருத், ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன், நமீதா், பரோட்டா சூரி, சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி, சித்து- ஸ்ரேயா உள்ளிட்டோர் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளனர். இது போல் திருவண்ணாமலைக்கு திரை பிரபலங்கள் குவிவது ஏன் என்பதை பார்க்கலாம். திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம் ஆகும். அக்னி என்பது ஆளுமை, தலைமைப் பண்பை குறிக்கும். அரசியல் செல்வாக்கையும் பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் அக்னி ஸ்தலத்திற்கு வருவது அவசியம். அரசியல் என்றில்லை, அவரவர் துறையில் தொடர்ந்து நீடிக்கவும் சாதிக்கவும் அண்ணாமலையார் அருள் அவசியம் என கருதி வந்து வழிபடுகிறார்கள். காசி, ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட கோயில்களுக்கு நேரில் சென்று தரிசித்தால்தான் அருள் கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை! என்பார்கள். எனவே நினைத்தாலே அத்தனை பலன்கள் எனும் போது நேரில் சென்றால், அண்ணாமலையார் துன்ப காலங்களில் நம்மை கைவிடவே மாட்டார். எனவே யாருக்காவது பதவிகளில் அழுத்தம் இருந்தாலோ , காரியத் தடை இருந்தாலோ அருணாசலேஸ்வரரை நாடலாம். கிரிவல பாதையில் பல்வேறு சித்தர்கள் இருக்கிறார்கள். மூலிகை செடிகள் நிறைந்துள்ளதால் அதிலிருந்து வீசும் காற்று, மன அழுத்தத்தை குறைத்து நேர்மறை ஆற்றலை தரும். கிரிவலப் பாதையில் ரமண மகரிஷி, யோகிராம் சுரத்குமார் உள்ளிட்ட மகான்களின் ஆசிரமங்களும், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகளும் உள்ளன. அது போல் பவுர்ணமி காலங்களில் கிரிவலம் செல்லும் போது சித்தர்களும் அண்ணாமலையாரை எண்ணி கிரிவலம் செல்கிறார்கள். இது பக்தர்களுக்கு விபூதி, சந்தனம், பன்னீர், பூ உள்ளிட்ட திடீர் வாசங்களின் மூலம் உணர்த்துகிறார்கள்.காஞ்சிபுரம், திருவண்ணாமலைக்கு போகாமலேயே காமாட்சி, அண்ணாமலையாரை தரிசித்த பலன் சென்னையில் கிடைக்குமே!
விஜய் சேதுபதி செய்ததை மறக்க முடியாது.. அண்ணாமலை சீரியல் நடிகை ஐஸ்வர்யா உருக்கம்