திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகை தரவுள்ளதையொட்டி முன்னேற்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இன்று ரமண மகரிஷி ஆசிரம பூஜையிலும் கலந்து கொள்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை வருகிறார். திருவண்ணாமலை- செங்கம் சாலையில் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.
அங்கிருந்து அவர் ரமண மகரிஷி ஆசிரமத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலையார் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் புதுச்சேரிக்கு மாலை மார்க்கமாக செல்கிறார். அங்கு புதுவை காவல் துறைக்கு விருதுகளை வழங்கி பேசுகிறார். அமித்ஷா வருகையையொட்டி, ஹெலிகாப்டர் தனது இறங்கும் தளத்தில் மத்திய உள்துறை பாதுகாப்பு அலுவலர்கள், பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்தனர். ஹெலிகாப்டரை தரை இறக்கி சோதனை செய்தனர். மேலும் அண்ணாமலையார் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டனர்.