கண்ணாடியில் கேமரா.. திருவண்ணாமலை கோவிலில் இஸ்க் இஸ்க்! வசமாய் சிக்கிய பவுனேஷ், மகேஷ்! பரபர

  • திருவண்ணாமலை: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் லாரியை எடுத்துச் சென்ற நிலையில், இன்று மீண்டும் கண் கண்ணாடியில் கேமரா வைத்து கோவிலுக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவுள்ள நிலையில் பவுனேஷ், மகேஷ் ஆகிய நபர்கள் கேமரா வைத்த கண் கண்ணாடி அணிந்து வந்துள்ள நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    போலீசார் அந்த நபர்களிடம் அருணாச்சலேஸ்வரர் புகைப்படம் எடுக்க வந்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லாரி ஒன்றை மர்ம நபர் எடுத்துச் சென்றதாக பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் மிகத் துல்லியமான கண் கண்ணாடி கேமராவை இணைந்து வந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மமான முறையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் இருந்து லாரியை எடுத்துச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அனைத்து கோவில் ஊழியர்கள் சாவிகளை போட்டு பூட்டி வைக்கும் நிலையிலும், யாருடைய கண்ணிலும் படாமல் எப்படி கோவிலுக்குள் இந்த நபர் வந்தார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம் மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனம் மற்றும் பூஜைக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு மேற்படி இடங்கள், ஹெலிபேடு மற்றும் குறிப்பிட்ட மிக முக்கிய நபர் பயணிக்கும் வழியின் சுற்றுப்புறங்களில் ட்ரோன்கள், ரிமோட் கட்டுப்பாட்டு விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களின் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதையும் தாண்டி திருவண்ணாமலை கோவிலில் ரேபான் ஸ்மார்ட் கிளாஸ் ஏஐ கேமரா மூலம் கோவிலை படம் பிடித்தது யார்? எதற்காக படம் பிடித்தார்கள்? இது சாதாரணமாக நடந்ததா? அல்லது வேறு எனும் சதியா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English Summary

    Two men were questioned after allegedly entering Tiruvannamalai temple wearing camera-equipped smart glasses amid heightened security for Amit Shah's visit.