தனுஷ் அரசியல் என்ட்ரி உறுதி? திருவண்ணாமலை வந்தவரை வரவேற்க திரண்ட ரசிகர்கள்! காரில் நின்றபடி உற்சாகம்

  • திருவண்ணாமலை: ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை வந்த நடிகர் தனுஷ்-க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். காரில் இருந்தபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தார் தனுஷ். தனுஷ், அரசியலில் களமிறங்கப்போவதாக தகவல்கள் சிறகடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில், அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Advertisement

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆடேக்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

    ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    Advertisement

    சமீபத்தில் வெளியான 'ஓம்' படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படம் வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் பணிகளை விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிரமாக படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்த நிலையில், 'ஓம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் திருவண்ணாமலை கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அங்கு வந்த நடிகர் தனுஷை நேரில் காணவும், அவரது படப்பிடிப்புச் காட்சிகளைப் பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

    Advertisement

    காரில் இருந்தபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தார் தனுஷ். ரசிகர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். தனுஷை பார்த்த அவரது ரசிகர்கள் கைகுலுக்கி அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். அதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷும், அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

    தனுஷின் பேச்சுகளும், நடவடிக்கைகளும் அவர் உறுதியாக அரசியலுக்கு வருவார் என்பதைக் காட்டுவதாக பலரும் தெரிவிக்கின்றனர். தனது ரசிகர் மன்றங்களை மற்றும் நற்பணி மன்றங்களைச் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக விரிவுபடுத்தவும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பலப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Fans gave an enthusiastic welcome to actor Dhanush, who arrived in Tiruvannamalai for the shooting of the film 'Om'. Dhanush waved to the fans from his car. It is noteworthy that reports suggesting Dhanush is set to enter politics are currently circulating widely.