தவெக ஆட்சி இன்னும் 4 மாசம் தான்.. கலைத்து ஆடப்போகும் எடப்பாடி.. அக்ரி கிருஷ்ணமூர்த்தி பகீர்

  • திருவண்ணாமலை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. தவெக ஆட்சிக்கு 4 மாதம் தான் ஆயுள் என்று எடப்பாடி பழனிசாமி கெடு விதித்துள்ளதாக அதிமுக நிர்வாகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

    Advertisement

    திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "மின்னலை முழுங்கி, மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடியாரின் இதயத்துடிப்புகளே. புரட்சி தலைவர் எம்ஜிஆரின் இதயத்துடிப்புகளே. மாசற்ற புரட்சி தலைவி ஜெயலலிதாவின் ரத்த ஓட்டங்களே. அதிமுக என்கிற ஆலயத்தின் பிதாமகன்கள் நீங்கள் தான். நீங்கள் இருக்கின்ற வரை, கழக முன்னோடிகள் இருக்கும் வரை அதிமுகவின் தூசியை கூட யாராலும் தொட முடியாது.

    Advertisement

    தவெகவுக்கு 4 மாதம் தான்

    அண்ணன் எடப்பாடி அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார். இன்னும் 4 மாத காலத்திற்குள்ளாக இந்த ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொல்லியுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அமர்வார். அப்போது நம் கலசப்பாக்கம், செங்கம் சட்டமன்ற தொகுதிகளை தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.

    உங்கள் உழைப்பு மிகவும் கடினமானது. அதை அங்கீகரிக்க கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு தொண்டர்களும் நினைக்கும் அந்த நாள் வரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை தந்தார்கள். அந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். 34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று விஜய் முதலமைச்சராக ஆட்சி, அதிகாரம் செய்கிறார். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

    Advertisement

    இடைத்தேர்தல் முடிவு

    ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கு ரூ.2,500 உதவித் தொகை தருவேன் என்று கூறினார். அவர் சொல்லி 4.5 மாதங்கள் முடிந்துவிட்டது. இதுவரை அத்திட்டத்தை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. 6 சிலிண்டர் தருகிறோம் என 3 சிலிண்டர்களை தருவதாக பின் வாங்கியுள்ளனர். மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இதன் பிறகு நடக்கும் இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.

    English Summary

    ADMK Former Minister Agri Krishnamoorthy said, Edappadi Palanisamy will dissolve TVK Government in 4 months. Soon he will become Tamilnadu Chief Minister again.