திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போனுக்கு தடை.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். அப்போது பொது மக்கள் அவரிடம் நிறைய குறைகளை சொன்னார்கள். இந்நிலையில் அந்த கோயிலில் செப்டம்பர் மாதம் முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை ரமேஷ் விளக்கியுள்ளார்.

    Advertisement

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " திருவண்ணாமலை கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகிறார்கள். கூட்டத்தை நிர்வகித்து கண்காணிப்பது சிரமமான காரியம். மக்கள் கோயிலுக்குள் வந்தால் தரிசனம் செய்துவிட்டு வெளியில் செல்லும் நேரம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. வார இறுதி நாட்களில் கோயிலின் அளவை விட அதிகளவு மக்கள் வருகின்றனர்.

    Advertisement

    செல்போனுக்கு தடை

    மக்கள் விரைவாக தரிசனம் செய்ய என்ன நடவடிக்கை தேவை என்பதை ஆய்வு செய்துள்ளோம். மாவட்ட ஆட்சியர், காவல்துறை, கோயில் அலுவலர்கள் ஆகியோரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினோம். உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான வழிவகை செய்வதையும் ஆலோசனை செய்கிறோம். இன்றைக்கு தான் கூட்டம் நடத்தியுள்ளோம். தொழில்நுட்ப ரீதியாக உள்ளூர் மக்களுக்கு தனியாக வரிசை வைக்க கடைபிடிக்க முடியுமா என்று ஆய்வு செய்து முடிவு செய்வோம். ஏற்கனவே இலவச தரிசனம், 50 ரூபாய் தரிசனம் உள்ளது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு, மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை எப்படி அனுமதிப்பது என்று ஆலோசனை நடத்தி வருகிறோம். பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வரிசை மேலாண்மை குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட பெரிய முதுநிலை கோயில்களில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நிறைய மக்கள் அந்த கோயில்களுக்கு வருகிறார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செப்ம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

    Advertisement

    காரணம் என்ன

    அங்கு வரிசை மேலாண்மை அவசியம். வரிசையில் நிற்கும்போது செல்போன் எடுத்து வருவோர், சாமி சிலைகளை போட்டோ எடுப்பது, கோயிலுக்கு ரீல்ஸ் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதேபோல விவிஐபிகள், திரை பிரபலங்கள் கோயிலுக்கு வரும்போது அவர்களுடன் செல்போனில் வீடியோ எடுத்து செல்பி எடுக்க முயற்சிக்கிறார்கள். நானே பல இடங்களில் இதை சந்தித்துள்ளேன்.

    தயவு செய்து போட்டோ எடுக்காதீர்கள் என்று கேட்பேன். நான் எல்லா கோயில்களிலும் பொது தரிசனத்தில் தான் செல்வேன். மக்களிடம் கருத்துகளை கேட்பது வழக்கம். அப்படி போகும்போது தான் செல்பி கேட்டனர். கோயில் என்பது வழிபாட்டு தளம். எனவே இதை மாற்ற நினைத்தேன். இறைவனை வழிபட்டு அமைதியாக செல்ல வேண்டும். ரீல்ஸ் போட்டோ எடுப்பதற்கான இடமில்லை என்பதால் கோயில்களில் செல்போனுக்கு தடை விதித்தேன்" என்றார்.

    English Summary

    Minister Ramesh said, Mobiles are banned in Thiruvannamalai Arunachaleshwarar temple from September 1st.