திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பிரபலம்! அவரை மாதிரியே இருக்காரு! ஆனா அவரில்லை!

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ஒரு பிரபலம் "அவரை" போலேவே இருக்கிறார். ஆனால் அவர் "அவர்" இல்லை. அந்த பிரபலத்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

    Advertisement

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தினமும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் சகோதரர் தேவிஸ்ரீ சாகர் தனது மனைவியுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அண்ணாமலையார் கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதி, நவகிரக சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

    இதையடுத்து அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவி ஸ்ரீ சாகரை பார்த்த ரசிகர்கள் சட்டென்று தேவிஸ்ரீ பிரசாத்தோ என நினைத்து ஏமாந்து போனார்கள். பிறகு அவரிடம் தேவிஸ்ரீபிரசாத் குறித்து நலம் விசாரித்தனர்.

    Advertisement

    கடந்த ஓராண்டில் இதுவரை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    அனிருத்: பிரபல இசையமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ரஜினி மகள்: அது போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவார். அந்த வகையில் அண்மையில் தனது மகன் லிங்காவின் பிறந்தநாளையொட்டி அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

    நடிகர் ரவிமோகன்- கெனிஷா- ரவி மோகனை விட்டு கெனிஷா பிரிந்து செல்வதற்கு முன்னர் இருவரும் இந்த கோயிலில் சிறப்பு தரிசனம் செய்திருந்தனர்.

    Advertisement

    பாபி சிம்ஹா, இந்த கோயிலுக்கு வந்து சிறிது நேரம் தியானம் செய்தார். அவரை போல் ராகவா லாரன்ஸ் தனது தாயுடன் வந்திருந்தார். நடிகர் பரோட்டா சூரி, நமீதா, சின்னத்திரை பிரபலம் சைத்ரா ரெட்டி, சித்து- ஸ்ரேயா தம்பதி உள்ளிட்டோரும் இங்கு வந்திருந்தனர்.

    பவுர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபம் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாதாமாதம் பவுர்ணமியின் போது பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். அது போல் சித்தர்களும் கிரிவலம் செல்வதாக ஐதீகம் உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் இந்த அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இங்கு வெளிநாட்டவர்களும் வந்து நமது ஆன்மீக நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள். அத்துடன் ரமணர் ஆசிரமம், யோகிராம் சுரத்குமார் ஆசிரமங்களுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    English Summary

    Music Director SriDevi Prasad brother Sri devi sagar visited Thiruvannamalai Annamalaiyar temple yesterday with his wife.