தொப்பி போட்டு எப்படி வரலாம்? அமைச்சர் ரமேஷ் ஆதவுடன் வந்தவருக்கு எதிர்ப்பு! திருவண்ணாமலையில் பரபரப்பு

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த அமைச்சர் ரமேசுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. அமைச்சர்கள் ரமேஷ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தனர். அப்போது ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பி அணிந்துவிட்டு வந்து இருந்தார்.

    Advertisement

    இதனை பார்த்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த அடிப்படையில் அவரை உள்ள கூட்டிட்டு வர்றீங்க?.. தங்களாலும் இதுபோல தொப்பி அணிந்து 10 பேரை அழைத்துவர முடியும்.. நாங்களும் அழைத்து வரட்டுமா? எப்படி நீங்கள் அனுமதிக்கலாம்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    அமைச்சர் ரமேஷ், ஆதவ் அர்ஜுனா

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மதம் மகா தீபம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மகா தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

    இன்று திருவண்ணாமலைக்கு வந்த மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும் அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மகாதீப திருவிழாவை முன்னிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர்.

    எங்களாலும் 10 பேரை கூப்பிட்டு வர முடியும்

    அப்போது அமைச்சர்களுடன் அவர்களது உதவியாளர்கள் மற்றும் போலீசார், அதிகாரிகளும் உடன் வந்தனர். ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால், தொப்பி அணிந்துவிட்டு வந்து இருந்தார். இதனை பார்த்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த அடிப்படையில் அவரை உள்ள கூட்டிட்டு வர்றீங்க?.. தங்களாலும் இதுபோல தொப்பி அணிந்து 10 பேரை அழைத்துவர முடியும்.. எப்படி நீங்கள் அனுமதிக்கலாம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    Advertisement
    ஒரே ஆபாசம்.. சட்டசபை கட் அடிச்சுட்டு பாத்ரூமில் உட்காரலாமா.. உதயநிதியை கலாய்த்த அமைச்சர் ரமேஷ்

    உடனே அவர்களை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சமாதானம் செய்தார். இதையடுத்து, தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு திருவண்ணாமலை கோவிலில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமைச்சர் ரமேஷ் பேச்சு

    இந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஆதவ் அர்ஜுனாவும், அமைச்சர் ரமேஷும் கலந்து கொண்டனர். பல்வேறு அரசு துறைகளின் சார்பில் முடிவுற்ற ரூ.17. 35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள், 3,038 பயனாளிகளுக்கு ரூ.8.13 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

    Advertisement
    என்னது ஜோசப் விஜய் அழகரா? கொளுத்திப் போட்ட அமைச்சர் ரமேஷ்! பத்திகிட்டு எரியுது சோஷியல் மீடியா!

    மேலும் 200 கர்ப்பிணி பெண்களுக்கு அமைச்சர்கள் சீர்வரிசைகளை வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ரமேஷ் பேசும் போது, "மக்களை தங்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்றும், மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய், எங்களுக்கு சொல்லிக் கொடுத்து உள்ளார். இது ஒரு குடும்ப ஆட்சி அல்ல. மக்களின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி. இந்த ஆட்சி பெண்களுக்காக மட்டுமே நடந்து வருகிறது"என்று கூறினார்.

    English Summary

    Minister Ramesh: A tense situation arose at the Annamalaiyar Temple in Tiruvannamalai when some individuals got into an argument with Minister Ramesh. Minister Ramesh, accompanied by Adhav Arjuna and others, had arrived at the temple. During this visit, an assistant to Adhav Arjuna—who belongs to a different religion—was wearing a cap.