ஒழுக்கமான குட்டி சிறுத்தைகள்.. உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டால் பலருக்கு பயம்! திருமாவளவன் ஒரே போடு!

  • திருவண்ணாமலை: இளம் தலைமுறைகளை லட்சக்கணக்கில் கடந்த 17ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று வெற்றி பெற செய்து உள்ளனர். மக்களின் பாதுகாப்பை கருதி அதில் இரண்டே நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தேன் எனவும், தமிழக அரசியல் களத்திலேயே மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட இயக்கமாக வி.சி.க. மாநாட்டின் மூலம் நிரூபித்து உள்ளதாகவும், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி வி.சி.க மாவட்ட செயலாளர் வளர்மதி இல்லத் திருவிழாவில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்த வி.சி.க. தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    Advertisement

    அப்போது பேசிய அவர்," தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திட்டமிட்டு குறி வைத்து ஆதாரங்கள் இல்லாமல் விடுதலைச் சிறுத்தை கட்சி தேர்தலில் கரைந்து போனது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி வதந்திகளை பரப்பினர்.

    திருமாவளவன்

    அவர்களின் நோக்கம் வி.சி.க. என்ற இயக்கம் மாபெரும் அரசியல் சக்தியாக வலிமை பெற வாய்ப்பு உள்ளதை அறிந்து அதனை முறியடித்து விட வேண்டும் என்ற அடிப்படையில் ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அந்த அவதூறுகளை பொய்ப்பிக்கும் வகையில் இளம் தலைமுறைகளை லட்சக்கணக்கில் கடந்த 17ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று வெற்றி பெற செய்து உள்ளனர். மக்களின் பாதுகாப்பை கருதி அதில் இரண்டே நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தேன்.

    Advertisement

    உளுந்தூர்பேட்டை மாநாடு

    அப்போது ஆளுங்கட்சியோடு பயணித்தோம், இனி ஆளுங்கட்சியோடு பரிணமிப்போம் என்ற கருத்தை பதிவு செய்தேன். அது குறித்தும் சமூக ஊடகங்களின் விவாதிக்க முன் வராமல் தற்போது வி.சி.கவினர் ஒழுங்கினமானவர்கள் என்று சித்தரித்து வருகின்றனர். பல லட்சம் பேர் திரண்டு இருந்த இடத்தில் எந்த விதமான பதட்டத்திற்கும் இடம் பெறாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்காமல் கட்டுப்பாடு காத்து தமிழக அரசியல் களத்திலேயே மிகச் சிறந்த ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களை கொண்ட இயக்கமாக வி.சி.க. மாநாட்டின் மூலம் நிரூபித்து உள்ளது.

    முதலமைச்சர் விஜய்

    இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் வழக்கம்போல் தனது இயக்கத்திற்கு எதிரான நன்மதிப்பிற்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவற்றை அனைத்தையும் கடந்து இந்த இயக்கம் வலிமை பெறும்.
    மாநாடு வெற்றி பெற வாழ்த்து செய்தி கூறிய தமிழக முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக மாபெரும் மாநாடு, மகத்தான வெற்றி என்று மனம் திறந்து பாராட்டினார். அவரை நேரில் சந்தித்த போதும் இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாநாடு கூறி பாராட்டினார்.

    Advertisement

    சாதி ஒழிப்பு

    வருகிற 29ம் தேதி மாநாடு மலர் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை கோரிக்கையாக உரைக்க பேசுவதை இந்த மாநாட்டின் நோக்கம். சாதி ஒழிப்பு, மதசார்பின்மை, மாநில சுயாட்சி, தேசிய இனங்களின் ஐக்கியம் இவற்றையே இந்த மாநாட்டின் மூலம் வலியுறுத்தி உள்ளோம்.

    மாநில சுயாட்சி

    இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில சுயாட்சி என்ற குரல் ஒலிக்க வேண்டும். இது குறித்து தென்னிந்திய மாநிலங்களில் முதலில் பயணம் மேற்கொள்ள உள்ளேன். மாநில சுயாட்சி கோரிக்கை தமிழகத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலத்திற்கும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    Advertisement

    தமிழக சட்டமன்றம்

    மேலும் சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். கட்சி மற்றும் தனிநபர் விமர்சனங்களை சட்டமன்றத்திற்கு வெளியே அரசியல் மேடையில் வைத்துக் கொள்ளலாம். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மாண்புக்காத்து பேச வேண்டும். சட்டமன்ற ஒளிபரப்பை தொடர்ந்து நேரலையில் ஒளிபரப்புவதை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து மக்களும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக உள்ளது. சட்டமன்ற நேரலை ஒளிபரப்புகள் அவசியமானது.

    த.வெ.க. அரசு

    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் கொடுப்பதை வரவேற்கிறேன். வி.சி.க., த.வெ.க.வோடு இணைந்தே பயணிக்கும் என்பதை மாநாட்டிலேயே தெரிவித்துள்ளேன். 100 நாள் ஆட்சியை பாராட்டுகிறேன். தற்போது த.வெ.க. அரசு கற்றுக் கொள்வதற்கான நேரம். ஊழல் இல்லாத அரசாங்க இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்து சாதனையை செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே வாதங்களும், சவால்களும் ஏற்படதான் செய்யும் என்று கூறினார்.

    English Summary

    Thirumavalavan says VCK proved its disciplined youth strength at Ulundurpet conference and backs alliance with TVK government.