திருவண்ணாமலையில் ஆசிரியர்கள் திட்டியதால் பிபி மாத்திரை சாப்பிட்ட 3 மாணவிகள்

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் பிபி சாப்பிட்ட 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் (மேல்பள்ளிப்பட்டு) பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 3 மாணவிகளை, ஆசிரியர்கள் தனி அறையில் வைத்து திட்டியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் மனவேதனையடைந்த அம்மாணவிகள் மூவரும் அளவுக்கு அதிகமான பிபி (இரத்த அழுத்த) மாத்திரைகளை உட்கொண்டு மயங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அவர்களை உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றது.

    அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவி மதுமிதாவின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இன்றைய சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களிடையேயான உறவு என்பது மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆசிரியர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த போக்கு காரணமாக ஆசிரியர்கள் படிக்காத குழந்தைகளை, ஒழுங்கீனமான குழந்தைகளை கண்டிக்க முடியாத நிலை இருக்கிறது. இதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். சின்ன சின்ன தோல்வி,ஏக்கம், அவமானம் எனஎதையும் சந்திக்கவிடாமல், தோல்வியே சந்திக்காமல் வளரும் குழந்தைகள், திடீரென ஏற்படும் நெருக்கடியை அல்லது தோல்வியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். செல்லம் கொடுத்து வளர்ப்பது என்பது அந்த குழந்தைகளை அழிப்பதற்கு சமம்.

    Advertisement

    அண்மையில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. வெறும் 16 வயதான மகனுக்கு 200 சிசி பைக்கை அவரது அம்மா ஆசையுடன் வாங்கி தந்துள்ளார். ஆனால் அந்த பைக் வாங்கிய வெறும் 9 நாளில் விபத்தில் அந்த சிறுவன் இறந்து போனான். இப்போது அவர்களது பெற்றோர் மனம் என்ன பாடுபடும். குழந்தைகள் கேட்கிறது என்பதற்காக விஷத்தை வாங்கி கொடுப்பார்களா..வாய்ப்பே இல்லை.. அதுபோல் தான் குழந்தைகளுக்கு தேவை என்றால் மட்டுமே வாங்கித்தர வேண்டும். அதேபோல் அவர்களை சுயமாக முடிவெடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் தான் ஏக்கம், கோபம் சண்டை, ஒழுக்கம், அவமானம் எல்லாவற்றையும் கற்பார்கள். அவற்றை எப்படி கையாள்வது என்றே சொல்லி தர வேண்டும். அதனைவிட்டு விட்டுபெற்றோர்கள் பிள்ளைகளுக்காக சண்டைக்கு சென்றால், அவர்களால் கடைசி வரை அந்த பிரச்சனையை கையாள தெரியாமலேயே வளருவார்கள். இது பெற்றோருக்கான சிக்கல்.

    Advertisement

    அதேபோல் ஆசிரியர்களும் குழந்தைகளை கண்டிப்பது தவறு இல்லை என்றாலும், அவர்களின் மனம் புன்படாத வகையில் , பிரச்சனைகளை கூறி அவர்களை திருத்த வேண்டும். அதுவும் தவறான முடிவுகளை நோக்கி மாணவ, மாணவிகளை தள்ளாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

    மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

    English Summary

    Three school girls in Chengam, Tiruvannamalai, consumed BP pills after being scolded by teachers; they are undergoing intensive treatment.