இடைக்காட்டு சித்தர் பதித்த யந்திரம்! திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலின் அதிசயக்கும் வரலாறு என்ன?

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியான நிலையில் அந்த கோயிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக இருப்பது நினைத்தாலே முக்தி தருவது அண்ணாமலையார் கோயில். இந்த கோயிலில் கார்த்திகை தீபம், சித்ரா பவர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    Advertisement

    அது போல் சிவனே மலையாக உள்ளதாக எண்ணி 14 கிலோமீட்டர் தூரத்திற்கு கிரிவலம் மேற்கொள்கிறார்கள். மேலும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள், ஆசிரமங்கள், சிறப்பு வாய்ந்த கோயில்கள் என அனைத்தையும் சென்று வழிப்படுவதை மக்கள் பெரும்பாலானோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    அந்த வகையில் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு தினந்தோறும் வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அங்குள்ள துவாரம் வழியாக தங்கள் உடலை நுழைத்து வெளியே வருகிறார்கள். இப்படி செய்தால் அவர்களை பிடித்த கெட்டது விலகி சுபிக்ஷம் ஏற்படும் என்பது ஐதீகம்.

    தினமும் பலர் அந்த குறுகிய துவாரத்திற்குள் நுழைந்து சிரமப்பட்டு வெளியே வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியை சேர்ந்தவர் மணிக்குமார் (36), இவரும் பிள்ளையாரை தரிசிக்க உள்ளே வந்தார்.

    Advertisement

    அப்போது உடல் பருமன் காரணமாக அவரால் வெளியே வர முடியாமல் தவித்தார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை இழுத்து பார்த்தனர். ஆனாலும் அவர்களால் இழுக்க முடியவில்லை.

    இந்த நிலையில் மணிக்குமாரின் மார்பு பகுதி, தலை பகுதி சிக்கியதால் அவரால் மூச்சு விட முடியவில்லை. ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்தார். பிறகு அவரை எப்படியே மீட்ட பொதுமக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தை விட ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பேர் வந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

    Advertisement

    இந்த இடுக்கு பிள்ளையார் கோயில் குறித்து பார்க்கலாம். இந்த கோயில் மூன்று சிறிய வாசல்களை கொண்ட குகை போன்றதாகும். இடைக்காட்டுச் சித்தர் என்பவர் இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூன்று யோக யந்திரங்களை புதைத்து வைத்துள்ளதாக ஐதீகம்.

    இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலில் பெரிய விநாயகர் சிலை இல்லை. மேலும் இந்த இடுக்கை தாண்டி வந்தால் மட்டுமே பிள்ளையாரையும் நந்தியையும் தரிசிக்க முடியும். அதாவது குழந்தைகள் சுக பிரசவத்தின் போது தாயின் கருப்பையில் இருந்து எப்படி நெளிந்து வளைந்து வெளியே வருகிறதோ அது போன்ற ஒரு அனுபவத்தைத்தான் இந்த துவாரத்தில் நுழையும் போது தருகிறது.

    Advertisement

    கோயிலின் பின்புற வாசல் வழியாக ஒருக்களித்தப்படியே உள்ளே நுழைய வேண்டும். இதையடுத்து உடலை வளைத்து வளைத்து அடுத்த வாசலை கடந்து முன்பக்கம் வழியாக வெளியே வந்தால் பிள்ளையார் தரிசனம் கிடைக்கும்.

    இப்படி இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலில் என்னதான் இருக்கிறது தெரியும். இவ்வாறு நெளிந்து வளைந்து செல்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. உடல் வலிகள் பறந்து போகின்றன என்கிறார்கள்.

    அது போல் இந்த கோயிலில் இடுக்கில் நுழைந்து சென்றால் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் புதுமணத் தம்பதிகளும் இங்கு அந்த துவாரத்தில் நுழைந்து செல்கிறார்கள். மேலும் பில்லி, சூனியம் உள்ளிட்ட எதிர்மறை ஆற்றல்களும் இந்த கோயிலுக்கு சென்றால் நம்மை விட்டு நீங்குவதாக ஐதீகம்.

    Advertisement

    அதனால்தான் இந்த கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கிறார்களாம். இந்த கோயிலில் துவாரம் மிகவும் குறுகலாக இருக்கும். எனவே உடல் பருமன் உள்ளவர்கள், இணை நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்சினை கொண்டவர்கள் எல்லாம் உள்ளே துவாரம் வழியே நுழைவதை தவிர்த்துவிட்டு இடுக்கு பிள்ளையாரை வழிபட்டுச் செல்வது நல்லது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அது போல் இதுவரை இந்த துவாரத்தில் சிக்கி இறந்தவர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற சம்பவம் குறித்தும் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

    வேறு சில கோயில்கள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை சரிவில் உள்ளது விருபாக்ஷ குகை. இது மிகச் சிறிய மற்றும் குறுகிய குகை அமைப்பாகும். இதில் பக்தர்கள் தியானம் செய்யலாம். அது போல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் ஒரு பாறை குடைவரை கோயிலாகும். அரக்கோணத்தில் உள்ள மகேந்திரவாடி கோயிலும் பல்லவ மன்னர் மகேந்திர வர்மனால் பாறைகளில் வெட்டி உருவாக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பாறை குடைவரை கோயிலும் பாறை அமைப்பை கொண்டது.

    English Summary

    Do you know the details about Idukki Pillaiyar Temple? Why it has narrow path? who shouldnot enter into that temple?