திருவண்ணாமலை மகா தீபம்: திருக்கார்த்திகை நாளில் பக்தர்கள் மலை ஏற தடை.. கலெக்டர் அதிரடி உத்தரவு!

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் 24 ஆம் தேதி அன்று மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்வதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குவதால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Advertisement

    கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, பொதுமக்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அண்ணாமலையார் மலையில் ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளில் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த சூழலில் திருவண்ணாமலையில் தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.

    Advertisement

    வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வருவதால், மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், பக்தர்கள் தீப மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசிக்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை! சுப்ரீம் கோர்ட்!

    அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    Advertisement

    கார்த்திகை தீபத் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    English Summary

    Tiruvannamalai District Collector has announced that devotees will be prohibited from climbing the hill on the 24th, the day of the Karthigai Deepam festival in Tiruvannamalai. District Collector Vandana Garg explained that this restriction has been imposed due to the ongoing Northeast monsoon.