திருவண்ணாமலைக்கு பறக்கும் அமித் ஷா! புதுச்சேரி நிகழ்வுக்கு பின், ரமண ஆசிரமத்தில் பிளான் இதுதானா?

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கும் அமித் ஷா வருகை தர உள்ளார்.. புதுச்சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் உயரிய வண்ண விருதை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8-ம் தேதி புதுச்சேரி வருகிறார். இதையடுத்து, திருவண்ணாமலையிலும் ஆன்மீக பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.. அதுகுறித்த தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.

    Advertisement

    புதுச்சேரி காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, மிகச்சிறந்த ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, குடியரசுத் தலைவரின் உயரிய President's Colour அதாவது வண்ண விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    புதுச்சேரி வருகை

    இந்திய அளவில் காவல் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் இந்த விருதினை வழங்கும் விழா, புதுச்சேரி காவல் மைதானத்தில் கடந்த மாதமே நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதில் நேரடியாகப் பங்கேற்று விருதினை வழங்கவிருந்தார்.

    ஆனால் டெல்லியில் திடீரென வெடித்த மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து விட்டன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையாலும், பாதுகாப்பு காரணங்களினாலும் மத்திய அமைச்சரின் புதுச்சேரி பயணம் கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது... எனவே காவல் துறைக்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விருது வழங்கும் விழாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    உள்துறை அமைச்சர் அமித் ஷா

    இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட அந்த விழா இப்போது மறுபடியும் முறைப்படி உறுதி செய்யப்பட்டு, அதற்கான பயணத்திட்டமும் முறைப்படி வெளியாகியுள்ளது.

    அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 4.55 மணியளவில் புதுச்சேரிக்கு செல்கிறார்.. புதுச்சேரி கடற்கரையையொட்டி அமைந்துள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அன்றைய தினம் அவர் தங்கி ஓய்வெடுக்கிறார்.

    Advertisement

    திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமம்

    மறுநாள் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 8.10 மணியளவில் புதுச்சேரி கோரிமேடு காவல் மைதானத்தில் நடைபெறும் விழாவில் அமித் ஷா பங்கேற்கிறார்... அப்போது, புதுச்சேரி போலீசாரின் மகத்தான சேவையைப் பாராட்டி, குடியரசு தலைவரின் வண்ண விருதினை வழங்கி கவுரவிக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மாநிலத்தின் முக்கிய உயர் அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

    புதுச்சேரி நிகழ்வுகளை நிறைவு செய்த பிறகு, ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10.50 மணியளவில் ஹெலிகாப்டர் வாயிலாக அமித் ஷா திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ரமண மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், தொடர்ந்து புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்கிறார்.

    Advertisement

    அரசியல் ஆலோசனை கூட்டம்

    ஆன்மீக நிகழ்வுகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்... சென்னை வந்தடையும் அவர், விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் முக்கிய அரசியல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். இதில் மாநில அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு, அன்று இரவே அவர் தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன...!!

    English Summary

    Tiruvannamalai Visit.. Is This Amit Shah's Plan at Ramanashram After the Puducherry Event?