உன் தாயிடம் இப்படி செய்வாயா? திருவண்ணாமலை ஏரிக்கரையில் கர்ப்பிணி ரஞ்சிதா கேட்ட கேள்வி

  • திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலும், அதற்கு அந்தப் பெண் கொடுத்த அதிரடிப் பதிலும், அதைத் தொடர்ந்து வெடித்துள்ள அரசியல் சர்ச்சையும் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டாலும், சம்பவ அதிர்ச்சி இன்னமும் திருவண்ணாமலையை விட்டு நீங்கவில்லை.

    Advertisement

    திருவண்ணாமலை மாவட்டம்; சேத்துப்பட்டை அடுத்த பழம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சிதா.. வயதான இவர், தற்போது கர்ப்பமாக உள்ளார்.. சம்பவத்தன்று இவர் தர்மராஜா கோயில் அருகே உள்ள ஏரிக்கரை பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.

    Advertisement

    திருவண்ணாமலை ஏரிக்கரை

    அந்த நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற 20 வயது இளைஞர் அங்கே வந்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக, அந்த இளைஞர் திடீரென தன் ஆடைகளைக் கலைந்து, கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் ரஞ்சிதாவிடம் அதீத ஆபாச வார்த்தைகளில் பேசி, தன் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

    இந்த அநாகரிகச் செயலால் அதிர்ச்சியடைந்த ரஞ்சிதா, துணிச்சலுடனும் ஆவேசத்துடனும் செயல்பட்டு,அந்த இளைஞரை அங்கேயே பிடித்து வெளுத்து வாங்கியுள்ளார். "உன் அம்மா கிட்ட இப்படி நடந்துப்பியாடா?" என்று ஆத்திரத்துடன் கேட்டு, யோகேஸ்வரனை அடித்து துவம்சம் செய்துள்ளார்.

    Advertisement

    ரஞ்சிதா கேட்ட கேள்வி

    அத்துடன் விடாமல், பாதிக்கப்பட்ட பெண் சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கும் சென்று தைரியமாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் யோகேஸ்வரனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான், ஒரு அதிர்ச்சிகரமான உண்மை போலீசாருக்கே தெரியவந்தது..

    அதாவது கடந்த ஒரு வருஷ காலமாகவே, இந்த ஏரிக்கரை பகுதிக்கு தனியாக வரும் பெண்களிடம் தொடர்ந்து இதுபோன்று சில்மிஷங்களையும், பாலியல் தொந்தரவுகளிலும் யோகேஸ்வரன் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமானது. இதையடுத்து போலீசார் யோகேஸ்வரனை முறைப்படி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    யாரிந்த யோகேஸ்வரன்

    இதனிடையே, யோகேஸ்வரன் கைது செய்யப்பட்ட விவகாரம் சேத்துப்பட்டையில் பரபரப்பை தந்துவிட்டது.. காரணம், கைது செய்யப்பட்ட யோகேஸ்வரன் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தன.. ஆனால், இந்தத் தகவலை தவெக நகர நிர்வாகிகள் உடனடியாக மறுத்தனர். சம்பந்தப்பட்ட இளைஞருக்கும், தவெக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    எனினும் தவெக மாவட்ட செயலாளர் சத்யாவிற்கு தண்ணீர் பந்தல் திறப்பு விழாவின் போது, இந்த யோகேஸ்வரன் சால்வை அணிவித்த போட்டோ ஒன்று வெளியாகி விவாதத்தைக் கிளப்பியது. இந்தத் போட்டோவும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் அந்த வாலிபர் நடுரோட்டில் அடி வாங்கிய வீடியோ காட்சியும் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.

    பெண்கள் பாதுகாப்பு

    ஏரிக்கரைக்குச் சென்ற பெண்ணிடம் வாலிபர் அத்துமீறியதும், அதற்கு அந்தப் பெண் துணிச்சலாகக் கொடுத்த அடியும், அதைத் தொடர்ந்து எழுந்துள்ள தவெக கட்சியினரின் விவாதங்களும் சேத்துப்பட்டு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.. அதுதுடன் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி தமிழகத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் கூடுதல் விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது...!!

    English Summary

    Tiruvannamalai: “Would You Do This to Your Own Mother?” — The Question Pregnant Ranjitha Asked at the Lakeside