இரவு பகலாக பெய்யும் கனமழை! டெல்ட்டாவில் லீவு இல்லையா? மாணவர்கள் கடும் அவதி!

  • திருவாரூர்: நேற்றிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை என டெல்டா முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாமல் இருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம், அரபிக்கடலிலிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதியை இழுத்திருப்பதால், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    Advertisement

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக, உதகை - கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோடப்மந்து தேயிலை தொழிற்சாலை அருகே மண் சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அதேபோல உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவினர், நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்புத் துறையினர், சாலைகளில் விழுந்த மண் சரிவுகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியும், மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய நான்கு வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    ஆனால், நீலகிரியை போலவே டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. நாகப்பட்டினம், மயிலாடுதுறையிலும் இதே நிலைமைதான். கனமழை பெய்தும் இப்போது வரை திருவாரூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

    நள்ளிரவு முதல் மழை பெய்து வருது தெரிந்தும் முன்கூட்டியே விடுமுறையை அறிவிக்காமல், 9 மணிக்கு விடுமுறை அறிவிப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். 8-8.30 மணிக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு.. மாணவர்கள் பள்ளிக்கு சென்றதும், விடுமுறை அறிவித்திருப்பதால் மழையில் நனைந்துக்கொண்டே மாணவர்கள் வீடு திரும்பும் நிலை உருவாகியிருக்கிறது.

    Advertisement

    அதேபோல இன்னும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால், மாணவர்கள் மழையில் நனைந்துக்கொண்டே பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், விடுமுறை குறித்த அறிவிப்பை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், மழையை கருத்தில் கொண்டு திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    English Summary

    Heavy Rain: Since last night and continuing until 9:00 AM today, heavy rain has been lashing the entire Delta region—covering Tiruvarur, Thanjavur, and Mayiladuthurai. However, the failure to declare a holiday for schools has caused dissatisfaction among students and parents.