திருவாரூரில் திருமண ஆசையில் இருந்த காதலன்.. காதலி கொடுத்த காஸ்ட்லி ட்விஸ்ட்

  • திருவாரூர்: இன்றைக்கு ஆன்லைனில் பெண் தேடுவோர் அல்லது மாப்பிள்ளை தேடுவோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, பொய் தான். பொய் சொல்லி திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சி பெரிய சிக்கலை இருவருக்குமே ஏற்படுத்துகிறது. ஏமாற்றத்தை தாங்க முடியாமல் திருமணத்தை சில நாட்களிலேயே முறித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள். சிலர் பணத்தை சுருட்டுவதும் நடக்கிறது. திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.15 லட்சத்து 37 ஆயிரத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பெண் காவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

    Advertisement

    திருமணத்திற்கு பெண் தேடுவோர்,அவர்களின் குடும்பம், பூர்வீகம், அவரது பின்புலம் என்ன, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவரா அல்லது விவகாரத்து ஆகமாலேயே திருமணம் செய்கிறவரா என்று பல்வேறு விவரங்களை தெளிவாக விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்காமல் திருமணம் செய்தால் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.மாப்பிள்ளை தேடுவோருமே, வசதி, கார், சொந்த வீடு,பணம் என்று யோசிக்காமல் பின்புலத்தை தெளிவாக விசாரியுங்கள். அப்படி விசாரிக்காமல் பெண்ணை கொடுத்தால், பெரிய தண்டனையாக அமையும். ஏனெனில் திருமணத்திற்காக இருதரப்புமே ஏமாற்றுவது அதிகமாக நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

    Advertisement


    திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். 36 வயதாகும் இவர் வெளிநாட்டில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி தற்போது ஊர் திரும்பியிருக்கிறார். இவருக்கும், இவருடைய தூரத்து உறவினரான திருவாரூர் அருகே அகரத்திருநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகள் செமிலா(29) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செமிலா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கோவை பட்டாலியனில் பணியாற்றி வருகிறார்.

    ராஜமாணிக்கம், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த போது செமிலா மற்றும் அவருடைய சகோதரர் கோகுல்ராஜ்(23) மற்றும் தாய் சசிகலா(46) ஆகியோர் வங்கி கணக்கில் சிறுக, சிறுக ரூ.15 லட்சத்து 37 ஆயிரம் அனுப்பி வந்தாராம். இந்த நிலையில் செமிலாவுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றும் மற்றொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செமிலாவுக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது.

    Advertisement

    இதனைத்தொடர்ந்து தன்னை(ராஜமாணிக்கம்) திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய செமிலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரூ.15 லட்சத்து 37 ஆயிரத்தை மோசடி செய்து உள்ளார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் தாலுகா போலீசில் ராஜமாணிக்கம் புகார் அளித்தார்.

    வாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செமிலா மற்றும் அவருடைய தாய் சசிகலா, சகோதரர் கோகுல்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட தாய்-மகள் உள்பட 3 பேரும் திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் சசிகலா திருவாரூர் மகளிர் சிறையிலும், சகோதரர் கோகுல்ராஜ் நாகப்பட்டினம் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். செமிலாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த பெண் போலீஸ் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக கைதான சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English Summary

    Paramilitary woman soldier from Tiruvarur arrested for Rs 15 lakh fraud under the pretext of marriage