ஒரே நாளில் தவெகவை தூக்கி போட்ட இளைஞர்கள்.. தாராபுரம் திமுக மாஸ் சம்பவம்!

  • தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவெகவை கடுமையாக விமர்சிக்கின்றன. தவெகவை சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் நேரு கூறிய கருத்தால் திமுக தலைமை மகிழ்ச்சியடைந்துள்ளது.

    Advertisement

    தாராபுரத்தில் தவெகவை சேர்ந்த 100 இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "தவெக எதிர்பாராதவிதமாக வெற்றி பெற்று ஆளுங்கட்சியாகியுள்ளது. அதில் 20 முதல் 25 வயதுடைய தோழர்கள் திமுகவில் தளபதியை நோக்கி வந்துள்ளனர். தாராபுரத்தில் திமுக தான் வெற்றி பெறும் என்பதற்கு இதுதான் உதாரணம். உங்கள் அனைவரையும் வருக வருக என்று மனதார வரவேற்கிறோம். திமுக கடந்த 75 ஆண்டுகளாக பல சமுதாய சீர்த்திருத்தங்களை செய்துள்ளது.

    Advertisement

    ஸ்டாலின் பொறுப்பேற்பார்

    அனைத்து மக்களுக்கும் எல்லாருக்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் 5 ஆண்டுகளில் நிறைய திட்டங்களை கொண்டு வந்தோம். இந்த தேர்தலில் நாம் 72 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அவர்கள் 107 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 40 தொகுதிகளில் வெறும் 20,000 ஓட்டுகள் தான் வித்தியாசம். நீங்கள் எல்லாம் தாராபுரம் நகர கழகத்தில் சேர்ந்துள்ளீர்கள். விரைவில் தளபதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பின்னால் நிற்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை திமுக அமைத்து கொடுக்கும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் கூறிக் கொள்கிறேன்" என்றார். திமுக துணை பொதுச்செயலாளர் ராசா பேசுகையில், "அண்ணா, எம்ஜிஆர், என்டிஆருக்கு அடுத்து நான் தான் என்கிறார் விஜய். அண்ணா யார் என்று தயவுகூர்ந்து படிங்கள். அண்ணாவின் அறிவும், உழைப்பும் என்ன என்று தெரியுமா.

    Advertisement

    பெரிய வரலாறு

    இதை சொல்வதற்கு வெட்கமாக இல்லையா. உண்மையில் முதலமைச்சர் இப்படி சொன்னதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இது என்ன கண்றாவி என தெரியவில்லை. அமைச்சர் வன்னியரசு மோடி, அமித்ஷா என்கிறார். உடனே சபாநாயகர் பேசாதீர்கள் என்கிறார். இந்த இயக்கத்திற்கு பெரிய வரலாறு, கொள்கை உள்ளது. திசை மாறி சென்றவர்கள் மீண்டும் திமுகவில் இணைந்திருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை வணங்கி வரவேற்கிறேன்" என்றார்.

    English Summary

    Ahead of the Dharapuram bypoll, around 100 TVK youth joined the DMK, with KN Nehru and A Raja welcoming the new members and criticizing Vijay and TVK.