திருப்பூர்: திருப்பூரில் நட்பின் ஆழம் பிராணிகளுக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்திய மணி என்கிற தெரு நாய். நண்பன் நாய் உயிரிழந்த சோகத்தில் ஒரு நாள் முழுவதும் அதன் உடல் அருகிலேயே அமர்ந்து நட்பு என்பது சேர்ந்து ஓடுவதில் மட்டுமில்லை கடைசி பயணம் முடியும் வரை துணையாக நிற்பது என்பதை மயானம் வரை சென்று வெளிப்படுத்திய தெரு நாய் மணி . இது பற்றி பார்ப்போம்.
விலங்குகளை பற்றி பொதுவான படிப்பினை நமக்கும் எப்படி இருக்கும் என்றால், உணர்ச்சியற்றவை, வெறும் பசி மற்றும் இயல்பூக்கத்தால் மட்டுமே இயங்குபவை என்ற பொதுவான பிம்பம் நமக்கு இருக்கிறது. ஆனால் தெரு நாய்களுக்கு உறவினர்களோ அல்லது மனிதர்களைப் போலப் பெரிய சமூக அமைப்புகளோ கிடையாது. அவை ஒன்றாகத் திரிந்த சக நாயையே தனது குடும்பமாகவும், பாதுகாப்பு உணர்வாகவும் கருதியே வாழ்கின்றன.
நாய்களை பொறுத்தவரை மனிதனுடன் வாழ்ந்து பழக்கப்பட்டவை. மனிதனை போலவே நாய்கள் இயல்பிலேயே தனியாக வாழ்வதை விட ஒரு கூட்டமாகவோ வாழவே விரும்புகின்றன. எனவே தன்னுடைய நண்பனை இழப்பது அதற்குத் தன் சொந்தக் குடும்ப உறுப்பினரை இழப்பதாக நினைக்கிறது. நாய்களுக்கும் மனிதனை போலவே மகிழ்ச்சி, பயம், பொறாமை போன்ற உணர்வு உள்ளது. தனது எஜமான், தன்னை கவனிக்காமல் வேறுஒருவரை கொஞ்சினால் பொறாமையை வெளிப்படுத்தும். அதேபோல் தனது எஜமான் அல்லது நண்பனை இழந்தால் ஆழ்ந்த துக்கத்தையும் வெளிப்படுத்தும். தன் நண்பனின் வாசனை, அவன் அசையாமல் இருப்பதை வைத்து , இறந்துவிட்டான் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடும். அதன்பின்னர் துக்கத்தையே வெளிப்படுத்தும். திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் இரண்டு தெரு நாய்கள் ஒன்றாக தெருக்களில் சுற்றி வருவது வழக்கம் நேற்று முன்தினம்இந்த இரண்டு நாய்களில் ஒரு நாய் ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் ஓரத்தில் உயிரிழந்து கிடந்தது,அதன் நண்பன் நாயானது இறந்த நாயின் உடலை சுற்றி வந்து அதன் அருகிலேயே சோகத்தை வெளிப்படுத்தி அமர்ந்து கொண்டது. இதனை அந்த சாலை வழியாக சென்ற அக்கம் பக்கத்தினர்கள் அருகில் சென்று பார்த்த போது உயிரிழந்த நாயின் உடலின் அருகில், மற்றொரு நண்பன் நாய் உடலை விட்டு சிறிது கூட நகராமல் அருகிலேயே சோகத்துடன் அமர்ந்திருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் இறந்த நாயின் உடலை மாநகராட்சி மயானத்தில் அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லும் போது அதன் நண்பன் நாய் ஆனது அருகிலேயே நின்று அமைதியாக பார்த்து சோகத்துடன் காணப்பட்டது,உயிர் பிரியும் வரை அல்ல நட்பு அடக்க முடியும் வரை நட்பு எனநண்பன் நாய் உயிரிழந்த நண்பனின் உடல் அடக்கம் செய்யும் வரை துணையாக நின்று நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தியது. திருப்பூரில்தெரு நாய் இறந்து 1 நாள் ஆகியும் அதன் உடல் அருகிலேயே நண்பரின் பிரிவை தாங்க முடியாமல், சோகத்தில் அடக்கம் செய்த இடம் வரை சென்று, சுற்றி வந்தது. இப்படி நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தி, நண்பனின் கடைசி பயணம் முடியும் வரை துணையாக நின்றது அனைவரையும் கலங்கச் செய்தது. நட்பின் கடைசி காவல் என்பதை நண்பனின் நாய் மணி என செல்லமாக அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் நாய் உறுதி செய்தது.