பயமா.. பயமா காவல் நிலையத்தை சுற்றி வளைத்த 500 பேர்.. விஜய்க்கு எதிராக இறங்கி அடித்த அதிமுகவினர்!

  • திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கும் சூழலில், நேற்றிரவு திடீரென அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வகுமரன் கைது செய்யப்பட்டார். அப்போது சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல் நிலையம் முன் திரண்டு கோஷமிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது. அதிலும், முதல்வர் விஜய் மற்றும் நடிகையின் பெயரை கூறி கோஷமிட்ட வீடியோ விவாதமாகி இருக்கிறது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இப்படியான சூழலில் நேற்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.70 லட்சம் பிடிபட்டது. இந்த விவகாரத்தில் சுப்பிரமணி என்பவரிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமரன் கூறியதன் பெயரில் பணம் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.

    Advertisement

    இதன் காரணமாக உடனடியாக செல்வகுமரனை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் தாராபுரம் நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரனும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கப்பட்டார். இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவடைய ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதனால் ஆவேசம் அடைந்த அதிமுகவினர் உடனடியாக காவல் நிலையம் முன்பாக திரண்டு முற்றுகையிட்டனர். மறுபக்கம் தாராபுரம் - கரூர் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேரடியாக காவல் நிலையம் வந்தார். அப்போது முதல்வர் விஜய்யை கண்டித்து, பயமா.. பயமா.. என்று விஜய் மற்றும் நடிகை ஒருவரை ஒப்பிட்டு அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.

    Advertisement

    அதிமுகவினர் கோஷம் எழுப்பிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகப்பெரிய டிரெண்டாகி இருக்கிறது. இதனிடையே தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் நேரில் வந்துவிட்டார். டிடிவி தினகரன் நேரடியாக காவல் நிலையம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின், அதிமுக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர்.

    இதன்பின் செல்வகுமரன் மற்றும் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் வந்த போது, அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விஜய் ரோடு ஷோ செய்ய இருப்பதால், எந்த எதிர்ப்பும் வரக் கூடாது என்று காவல்துறை முன்னெச்சரிக்கையாக அதிமுக நிர்வாகிகளை கைது செய்ய முயற்சிப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    English Summary

    AIADMK: AIADMK Cadres Protest Arrest of District Secretary, Viral Video Slogan Targets CM Vijay and Trisha