நாங்கள் என்ன மெத்தபெட்டமைன் போதைப்பொருளா கடத்தினோம்? கைதான நாதக நிர்வாகி கார்த்திகா கேள்வி!

  • திருப்பூர்: தவெக ஆட்சியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்துபவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள் தைரியமாக இருப்பதாக நாதக நிர்வாகி கார்த்திகா ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதிகாலை 5 மணிக்கு என்னையும், என் கணவரையும் போலீசார் கைது செய்வதாக கூறியுள்ள கார்த்திகா, தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என்றும் கேள்வின் எழுப்பி இருக்கிறார்.

    Advertisement

    நாம் தமிழர் கட்சி சார்பாக தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட 6 பேர் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய் ரோடு ஷோ சென்ற சாலையில் போராட்டம் நடத்திய வழக்கில் கார்த்திகா கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    Advertisement

    அதிலும் தவெக நிர்வாகி பூபாலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வழக்கை திசை திருப்பவே கார்த்திகாவின் கைது தவெகவால் அரங்கேற்றம் செய்யப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகா காவல்துறை அலுவலகத்திற்கு வேனில் அழைத்து வரப்பட்டார்.

    அப்போது கார்த்திகா, விஜய் ஆட்சியில் மெத்தபெட்டமைன், கள்ளச்சாராயம் விற்பவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். ஆனால் நாதக சார்பாக போட்டியிட்ட என்னை கைது செய்து நடுத்தெருவில் வந்து நிறுத்தி இருக்கிறார்கள். காலை 5 மணிக்கு என்னையும், கணவரையும் கைது செய்கிறார்கள். நான் இரவு உடையில் இருக்கிறேன். உடை மாற்ற கூட அனுமதிக்கவில்லை.

    Advertisement
    தமிழகத்தில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்? முதல்வர் விஜய் போட்ட திட்டம்! ஏப்ரலில் தேர்தல்?

    நான் என்ன குற்றம் செய்தேன்? இறுதி நாள் பரப்புரை ஆளுங்கட்சிக்கு என்று ஒதுக்கப்பட்டுவிட்டதா? எங்கே சென்றாலும் விஜய் வரார்.. விஜய் வரார் என்று தடுத்தார்கள். மற்ற வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவே கூடாதா? காவல்துறை தரப்பில் மேலிடத்தில் இருந்து அழுத்தம் என்கிறது. என்னங்க மேலிடம்.. தவெக மாவட்டச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    இந்த எஃப்ஐஆர்-ஐ ஏற்றுக்கொள்ளவே முடியாது. நாங்கள் ஆபாசமாக காவல்துறையை பேசவில்லை. கைது செய்யப்பட்டுள்ள எங்கள் கட்சியினருக்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முழுக்க முழுக்க காவல்துறை பொய் சொல்கிறது. மக்களுக்காக போராடக் கூடிய நாதக நிர்வாகிகளை கைது செய்வது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    “Are We Smuggling Methamphetamine?”: Arrested NTK Functionary Karthika Questions Police Action