மதுராந்தகம், தாராபுரம்.. எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிந்துவிட்டது.. பொது வேட்பாளரை போட்டிருந்தால்?

  • திருப்பூர்: பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிபெறும் என்பது நிலவி வரும் நம்பிக்கையாகும். அதேநேரம் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வியடைவதும் உண்டு. 2019-இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கணிசமான தொகுதிகளில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தது.

    Advertisement

    இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்கிறது என்றால், அது அரசின் மீதான மக்களின் அதிருப்தியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படும். ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிட்டன. எனவே, அடுத்தடுத்து வரும் இடைத்தேர்தல்களில் பொது வேட்பாளரை நிறுத்துவதைப் பற்றி எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் ஆளும் கட்சிக்குக் கடும் போட்டியை அளிக்க முடியும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    Advertisement

    பொதுவாக, ஒரு வலுவான ஆளும் கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அங்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது அவசியமாகும். எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாமல் தனித்தனியாகக் களம் இறங்கினால், நிச்சயமாக ஆளும் கட்சியே வெற்றிபெறும்.

    2014-இல் ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 2019-இல் மீண்டும் வெற்றிபெற்றதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. அதேபோல, 2024 தேர்தலில் பாஜக தனித்து மெஜாரிட்டியைப் பெற முடியவில்லை; கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகியவற்றின் ஆதரவுடன்தான் பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கிறார். எதிர்க்கட்சிகள் இன்னும் வலுவாக ஒன்றுபட்டு நின்றிருந்தால், நிச்சயம் பாஜகவிற்கு அது கடும் சவாலாக அமைந்திருக்கும். ஆம் ஆத்மி, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் சரியாக இணைந்து செயல்படாததே 2024-இல் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றக் காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    Advertisement
    மதுராந்தகம், தாராபுரம் ரிசல்ட்.. தவெக வென்றால் என்ன ஆகும்? திமுக வென்றால் என்ன ஆகும்? முழு கணக்கு

    அதேபோல்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனியொருவராக விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்தச் சாா்பில் எந்தக் கூட்டணியும் இல்லாமல் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

    அதிமுகவில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துப் பதவி விலகி தவெகவில் இணைந்தனர். இதில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த முறை அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் வென்ற மரகதம் குமாரவேல் இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டார். அதேபோல, தாராபுரத்தில் கடந்த முறை அதிமுக சார்பில் வென்ற சத்தியபாமா இம்முறையும் தவெக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

    Advertisement

    இதில் மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். இங்கு திமுக வேட்பாளர் சுமார் 11 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 9700 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    ஸ்வீட் பாக்ஸ்க்கு ஆசைப்பட்டு அட்ரஸை போட்ட மதுரை வீரமணி.. குவியும் ஆர்டர்.. வித்தியாசமான பழிவாங்கல்

    ஆனால் தாராபுரத்தைப் பொறுத்தவரை, அதிமுக வேட்பாளர் பானுமதி 10883 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமா 10068 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஆளும் கட்சியான தவெக இங்கு 815 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. திமுக வேட்பாளர் சுகன்யா 8177 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் பின்தங்கியுள்ளார். இன்னும் பல சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் முன்னிலை நிலவரங்கள் மாறலாம் என்ற நிலை உள்ளது.

    Advertisement

    இருப்பினும், இந்த வாக்கு எண்ணிக்கை நிலவரத்தைப் பார்க்கும்போது, பாமக தலைவர் அன்புமணி கூறியது போல் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், ஆளும் தவெகவிற்கு அது கடும் சவாலாக மாறியிருக்கும். இப்போது எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நின்றிருப்பது ஆளும் தவெகவிற்கே சாதகமாக அமைந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Opposition votes were split in the Maduranthakam and Dharapuram constituencies. Opposition parties should consider fielding a common candidate for future by-elections; only then will there be a chance to put up a tough fight in the election.