பாஜக பாணியில் எம்எல்ஏகளை மிரட்டி இணைக்கும் தவெக.. இந்திய கம்யூனிஸ்ட் புகார்

  • திருப்பூர்:பாஜக அதிகாரத்திற்கு வந்தவுடன் பல நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்தார்கள். பல எம்பிக்களை, பல கட்சி தலைவர்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்தார்கள். அந்த வகையில்தான் தவெகவின் அணுகுமுறை உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

    Advertisement

    தமிழக வெற்றி கழக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார் . இவருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தாராபுரம் ஐந்து முக்கு பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

    Advertisement

    அப்போது வீரபாண்டியன் பேசுகையில், நடக்க இருக்கும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரு இயல்பான தேர்தல் அல்ல. இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும்.அதிமுகவிடத்தில் வெற்றி பெற்றுவிட்டு அதிகாரம் இருக்கிற தவெகவுக்கு செல்கிற இந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவது நெறிசார்ந்த அரசியல் அல்ல.

    பாஜக அதிகாரத்திற்கு வந்தவுடன் பல நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்தார்கள். பல எம்பிக்களை, பல கட்சி தலைவர்களை மிரட்டியே தங்கள் கட்சியில் இணைத்தார்கள். அந்த வகையில்தான் தவெகவின் அணுகுமுறை உள்ளது. இது ஏற்புடையது கிடையாது. . எனவே, அவர்களை ஆதரிக்க இயலாது என்று சொல்லி நாங்கள் தனியாகக் களம் காண்கிறோம். மேகதாது விவகாரத்தில் மாநில மக்களின் குரலை முதல்வர் அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும்" இவ்வாறு வீரபாண்டியன் பேசினார்.

    English Summary

    The Communist Party of India (CPI) has alleged that Tamizhaga Vettri Kazhagam (TVK) is adopting the BJP’s style of politics by intimidating and coercing MLAs into joining their party.