கால் வச்ச இடமெல்லாம் கண்ணிவெடி.. விரட்டியக்கும் மக்கள்! திமுகவின் சதி என்கிறார் தாராபுரம் சத்யபாமா!

  • திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய சத்யபாமா போட்டியிடும் நிலையில், செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவினர் தன்னைப் பற்றியும், தன்னைச் சார்ந்தும் தனிமனித தாக்குதல்களை முன்வைத்து வருவதாகவும், எனக்கு எதிர்ப்பு வந்ததாக வந்த செய்தி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை என கூறியுள்ளார் சத்யபாமா.

    Advertisement

    தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது பொதுமக்களில் சிலர் அவரை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் வெற்றி சந்தேகம் தான் என சொல்லப்படுகிறது.

    சத்யபாமா

    இதற்கிடையே தனக்கு எதிர்ப்பு வந்ததாக வந்த செய்தி முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டவை என கூறியுள்ளார் சத்யபாமா. திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தனிமனித தாக்குதல் என்பது திமுகவினருக்கு எப்போதுமே கை வந்த கலை. ஒரு வேட்பாளராக மக்களிடம் வாக்கு கேட்கும் போது, இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, மக்களுக்கு என்னென்ன திட்டங்களை செய்துள்ளது என்பதை எடுத்துக் கூறி வாக்கு கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனி மனித தாக்குதல்களை முன் வைப்பது ஏன்?

    Advertisement

    தாராபுரம் இடைத்தேர்தல்

    'சத்தியபாமா' என்ற பெயரே வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. விவசாயிகள் மத்தியில் குறைவான வரவேற்பு இருப்பதால் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா என்று கேட்கிறார்கள். அதனால் வெற்றி வாய்ப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது. மக்கள் நல்ல திட்டங்களின் அடிப்படையில் தான் முடிவெடுப்பார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

    அதிமுக-திமுக

    அதிமுக - திமுக கூட்டணி தொடர்பாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் பேசும் போது, கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட்டதற்கான ஆதாரத்தை முதலில் காட்ட வேண்டும் என்று கூறினேன். ஆர்.பி. உதயகுமார் தேர்தலில் வெற்றி பெறவில்லை. தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினரும் இல்லை. எனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து அவருக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    Advertisement

    தவெக

    இப்போது செங்கோட்டையிலும், தாராபுரம் தொகுதியிலும் இதேபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். தவெகவில் இணைந்திருப்பவர்கள் தாமாக முன்வந்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பும் நம்பிக்கையும் இருப்பதால்தான் வருகின்றனர். யார் அழைத்தாலும் எந்த இயக்கத்திற்கும் மக்கள் சென்று விட மாட்டார்கள். நீண்ட காலமாக திராவிடக் கட்சிகள் அரசியலில் இருந்தாலும், அந்தக் கட்சிகளில் இருந்து மக்கள் இவ்வாறு தன்னார்வமாக வந்து வேறு இயக்கத்தில் இணையும் சூழல் முன்பிருந்ததில்லை. தற்போது தவெக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பும் நம்பிக்கையும் காரணமாகவே பலர் தாமாக முன் வந்து இணைந்து வருகின்றனர்" என தெரிவித்தார்.

    English Summary

    TVK candidate Sathyabama rejects reports of public opposition in Dharapuram and alleges DMK-backed personal attacks.