அப்போ விரட்டி அடிச்சாங்க.. இப்போ அடிச்சு விரட்டுறாங்க! வீட்டில் முடங்கிய சத்யபாமா? டெபாசிட் தேறுமா?

  • திருப்பூர்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா தேர்தல் பிரசாரத்திற்கு வராததால் மீனாட்சிபுரம் பகுதியில் தவெக நிர்வாகிகள் தாங்களாகவே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செல்லும் இடமெல்லாம் பிரச்சனை இருப்பதால் சத்தியபாமா பிரச்சாரத்திற்கு வரவில்லை என தவெகவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் விஜய் விரைவில் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமா நேற்று பெரிய குமாரபாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர் அவரை தடுத்து நிறுத்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    தாராபுரம் இடைத் தேர்தல்

    இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வேட்பாளர் சத்யபாமாவுக்கு தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பொட்டிக்காம்பாளையம் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, வேட்பாளர் சத்யபாமா வாகனத்தை விட்டு கீழே இறங்காமல், பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்காமலேயே அங்கிருந்து திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

    Advertisement
    தாராபுரத்தில் பரபரப்பு.. திடீரென ஹாஸ்பிடலில் அட்மிட்டான தவெக வேட்பாளர் சத்யபாமா! தீர்ப்பு வேற வருதே!

    தவெக சத்யபாமா

    இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் சுறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இன்று மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்கு சேகரிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொண்டர்கள் ஏமாற்றம்

    இதற்காக உள்ளூர் நிர்வாகிகள் மைக் செட், பந்தல் உள்ளிட்டவற்றை அமைத்து காத்திருந்தனர். ஆனால் இன்று பிரச்சாரத்துக்கு சத்யபாமா வரவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் விரட்டியடிப்பதால் அவர் பிரச்சாரத்திற்கு செல்ல விரும்பவில்லை என சொல்கின்றனர். இதனால் வேட்பாளர் இல்லாமலேயே தமிழக வெற்றிக் கழகத்தினர் அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    Advertisement

    வீட்டில் முடங்கிய சத்யபாமா?

    ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என இரண்டு நாள் பிரச்சாரத்தை சத்யபாமா ரத்து செய்து நிலையில், நேற்றைய சம்பவத்துக்கு பிறகு இன்றும் பிரச்சாரத்திற்கு செல்லாததால் தமிழக வெற்றி கழகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். தாராபுரம் தொகுதியை பொருத்தவரை அதிமுக செல்வாக்கு மிக்க தொகுதி. தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் இரட்டை இலையின் முக்கிய வாக்கு வங்கியாக இருக்கிறது. கடந்த தேர்தலில் விஜய் அலையையும் தாண்டி அதிமுக, திமுக - தவெக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு இரட்டை இலை முக்கிய காரணம்.

    சத்யபாமா இல்ல.. ’பெட்டி’ பாமா! 10 நாளில் ராஜினாமா.. எவ்வளவு கொழுப்பு இருக்கனும்? விளாசிய உதயநிதி!
    Advertisement

    முதலமைச்சர் விஜய்

    சத்யபாமாவுக்கு என குறிப்பிட்ட வாக்கு வங்கி இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நிலையில் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் அங்கு தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் தொடர்ந்து வரும் எதிர்ப்பலையால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

    டெபாசிட் தேறுமா?

    இந்த தேர்தலில் தாராபுரத்தில் டெபாசிட்டாவது தேறுமா என்பதுதான் அவர்களது கேள்வி ஆக இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுகவினர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும் சொல்கின்றனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கும் அதிகரிக்கும் என்பதால் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணியில் ஈடுபட வைத்துள்ளார் என்கின்றனர்.

    English Summary

    TVK candidate Sathyabama skips Dharapuram campaign after protests, while party workers campaign without her ahead of the October 6 bypoll.