தாராபுரத்தில் தடுக்கப்பட்ட நாதக வேட்பாளர்! என்ன விஜய் மட்டும்தான் அரசியல் கட்சி நடத்துறாரா? சரமாரி கேள்வி!

  • திருப்பூர்: தாராபுரத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பரப்புரை மேற்கொண்டிருந்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியிருக்கும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    தாராபுரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நின்று வெற்றிப்பெற்ற சத்தியபாமா, தேர்ததலுக்கு பிறகு தவெகவுக்கு தாவிவிட்டார். எனவே இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று பிரச்சாரத்திற்கு கடைசி நாளாகும். எனவே அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

    Advertisement

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் கார்த்திகா தாராபுரம் மீனாட்சிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக முதலமைச்சர் விஜய் பிரச்சாரத்திற்கு வருவதாகவும், எனவே கார்த்திகாவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகா, "நாங்கள் எங்கள் இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், காவல்துறை அரை மணி நேரத்திற்கு முன்புதான் எங்களுக்கு இந்த பக்கம் முதல்வர் விஜய் வருவதாக கூறினர். மட்டுமல்லாது நாங்கள் பரப்புரை செய்யவும் அனுமதி மறுத்துள்ளனர். நாங்கள் மிஞ்சுப்போனால் வெறும் 10 நிமிடத்தில் அனைத்து வார்டகளையும் கவர் செய்துவிடுவோம். தமிழ்நாட்டில் விஜய் மட்டும் அரசியல் கட்சியை நடத்தவில்லை நாங்களும்தான் கட்சியை நடத்துகிறோம். போராடுகிறோம்.இவர் பரப்புரைக்காக எல்லோரும் அன்றைய நாள் வேலையை விட வேண்டுமா? இது தவறில்லையா? ஜனநாயகத்திற்கு விரோதம் இல்லையா? ஏற்கெனவே இந்த இடைத்தேர்தலே ஜனநாயகத்திற்கு விரோதமானதுதான்.

    Advertisement

    தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் ஜனநாயகத்தின் படுகொலைதான். வெற்றிப்பெற்ற ஆதிமுக எம்எல்ஏவை விலைக்கு வாங்கி இடைத்தேர்தலை நடத்துகிறீர்கள். வெட்கமாக இல்லையா? இப்போது பரப்புரை செய்யும்போது தடுக்கிறார்கள். நானும் வேட்பாளர்தான! பிரச்சாரம் செய்யக்கூடாதா? என்று கேட்டால் பிரச்சனை" என்று கூறியிருக்கிறார்.

    முன்னதாக நாதகவினர் தாராபுரத்தில் விஜய் சாலை வலம் வரும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Dharapuram: The final phase of the election campaign has heated up in Dharapuram. Amidst this, an incident where the police stopped the Naam Tamilar Katchi candidate while they were campaigning has caused a stir.