தீபாவளி பண்டிகையின் போதும் கூட.. திருப்பூரில் சரிந்த பனியன் வர்த்தகம்.. வேதனையில் வர்த்தகர்கள்!

  • திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கு உள்நாட்டு பனியன் வர்த்தகம் பெருமளவு சரிந்துள்ளதாக காதர்பேட்டை மொத்த வர்த்தகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வழக்கமாக தீபாவளிக்கு 500 பண்டல் பனியன்கள் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்கள் அனுப்பி வைக்கப்படும் சூழலில், இம்முறை 300 பண்டல் வரை மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி மிகப்பெரிய அளவில் ஆடை விற்பனை களைகட்டி இருக்கிறது. அந்த வகையில் திருப்பூர் பனியன் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகராக விளங்குகிறது. இங்கு ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள காதர்பேட்டை பகுதி இந்தியாவின் உள்நாட்டு சந்தைக்கு தேவையான பனியன் ஆடைகளை மொத்தமாக விற்பனை செய்யும் பகுதியாக உள்ளது.

    Advertisement

    இங்கு 800க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது . கேரளா ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, டெல்லி , கொல்கத்தா என நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இங்கிருந்து பனியன் ஆடைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கிருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பண்டல் பனியன் ஆடைகள் அனுப்பி வைக்கப்படும்.

    வழக்கமாக தீபாவளி பண்டிகை காலத்தில் 500 பண்டல்கள் வரை அனுப்பப்படும். ஆனால் இந்த முறை 300 பண்டல்கள் வரை மட்டுமே காதர் பேட்டையில் இருந்து பனியன் ஆடைகள் செல்வதாகவும் மொத்த வர்த்தகத்தில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    Advertisement

    அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் பணியன்கள் தற்போது உற்பத்தி செய்யப்படுவதும் வர்த்தக குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் வர்த்தகம் காரணமாக சில்லறை வணிகமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த விற்பனையில் சரிவடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

    English Summary

    Diwali Domestic Garment Business Plunges, Say Khaderpet Wholesale Traders in Tiruppur