எதிரிக்கு எதிரி நண்பன்.. திமுக - அதிமுக கூட்டு சேர்ந்தால் என்ன நடந்துவிடும்.. சாமிநாதன் ஓபன் டாக்!

  • திருப்பூர்: எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் திமுக - அதிமுக கூட்டு சேர்ந்தால் என்ன நடந்துவிடப் போகிறது என்று முன்னாள் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறிய சாமிநாதன், சினிமா மோகத்தில் கடந்த முறை சிதறிய வாக்குகள் இம்முறை திமுக பக்கம் திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக தரப்பில் தொடர்ச்சியாக திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க பார்த்தது என்று கூறி வருகின்றன. அதேபோல் அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ததற்கும் இதே காரணத்தை தான் கூறி வருகின்றனர். ஆனால் களத்தில் இது எந்த அளவிற்கு எடுபடும் என்று தெரியவில்லை.

    Advertisement

    அதேபோல் தவெகவின் சொதப்பல்களை திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மக்களிடம் கொண்டு செல்கின்றன. குறிப்பாக தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதன் காரணமாகவே முதல்வர் விஜய் இருந்த மேடையில் அவர் கண்ணீர் விட்டு அழுததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    மறுபக்கம் தாராபுரம் தொகுதியில் திமுக கணிசமான வாக்குகளை கைப்பற்றும் சூழலில் இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக மற்றும் அதிமுக கூட்டு சேர்ந்திருந்தால், எப்படி தனித் தனியாக வேட்பாளர்களை நிறுத்த முடியும். அதனை கூட மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? அதேபோல் திமுக - அதிமுக கூட்டணி வைப்பதில் என்ன தவறு.

    Advertisement

    எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கடந்த காலங்களில் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. மதிமுக பிரிந்த பின், திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. திமுக - அதிமுக ஒரே கட்சியாக இணையவும் கூட கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதெல்லாம் பெரிய தவறு கிடையாது. கூட்டணி அமைத்தபின், மக்கள் நன்மை என்றால் ஏற்றுக் கொள்ள போகிறார்கள்.

    தாராபுரம் தொகுதியில் நிச்சயம் திமுக வெல்லும். கடந்த முறை சினிமா மோகத்தில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறார்கள். அதனால் சிதறிய வாக்குகள் திமுக பக்கம் வரவிருக்கிறது. 150 நாட்கள் தவெக ஆட்சியில் எந்தவித நன்மையும் மக்களுக்கு ஏற்படவில்லை. 200 யூனிட் மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, மின் கட்டணத்தை மறைமுகமாக அதிகரித்துள்ளார். மின் வெட்டு, அரிவாள் வெட்டுக்கு இடையில் தான் போட்டி.

    Advertisement

    சத்தியபாமா செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதனால் அவரின் மனசாட்சி தான் அழுகையாக வெளி வந்துள்ளது. கட்சிக்கும், கட்சி தொண்டர்களின் உழைப்பிற்கும் துரோகம் செய்துள்ளார். இது தேவையற்ற இடைத்தேர்தல்.. சத்தியபாமா சுயநலத்திற்காக இடைத்தேர்தலை கொண்டு வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    English Summary

    DMK: DMK Ex-Minister Saminathan Hints at Enemy's Enemy Alliance Logic, Predicts DMK Win in Dharapuram