இரக்கமே இல்லையா.. தெருநாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற திமுக மாஜி எம்எல்ஏவின் பேரன் கைது

  • திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே நாகமநாயக்கன்பட்டி பகுதியில் தெருநாயை 'ஏர்கன்' துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக திமுக முன்னாள் எம்எல்ஏவின் பேரனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அருகே நாகமநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பாலாஜி (32). மளிகை கடை மற்றும் நூல் மில் நடத்தி வருகிறார்.

    Advertisement

    பாலாஜி வெள்ளக்கோவில் சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான அப்பன் மு பழனிச்சாமியின் பேத்தியை திருமணம் செய்துள்ளார். இதனால் பாலாஜியும் மாஜி திமுக எம்எல்ஏ அப்பன் மு பழனிச்சாமியின் பேரன் முறை வருகிறார். அப்பன் மு பழனிச்சாமி கடந்த 1971ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் வெள்ளகோவில் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.

    இந்நிலையில் தான் பகவதி அம்மன் கோவில் அருகே தெருநாய் ஒன்று வயிற்றில் காயங்களுடன் இறந்து கிடந்தது. தனியார் நிறுவன ஊழியர் பிரசாத் (வயது 27) பார்த்து அதிர்ச்சியடைந்தார். பக்கத்தில் சென்று பார்த்தபோது தெருநாயின் உடலில் இருந்த காயம் குண்டு துளைத்தது போல் இருந்தது. இதனால் அவர் சந்தேகம் அடைந்தார். யாரோ தெருநாயை துப்பாக்கியால் சுட்டு கொன்று இருக்கலாம் என்று நினைத்தார்.

    Advertisement

    உடனடியாக வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். .விசாரணை செய்ததில் மாஜி திமுக எம்எல்ஏ அப்பன் மு பழனிச்சாமியின் பேரனான பாலாஜி தனது துப்பாக்கியை வைத்து தெருநாயை சுட்டு கொன்றது தெரியவந்தது. பாலாஜி 'ஏர்கன்' வகையை சேர்ந்த துப்பாக்கி வைத்திருப்பதும், அதனை வைத்து தெருநாயை சுட்டு கொன்றதும் தெரியவந்தது.

    பாலாஜி மளிகை கடை, நூல் மில் மட்டுமின்றி ஆடு , மாடு,குதிரை போன்ற கால்நடைகள் வளர்த்து வருவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கோழியும் வளர்த்து வருகிறார். நேற்று தெருநாய் ஒன்று அவரது கோழியை கடித்து கொன்றதால் கோபமானா பாலாஜி, தெருநாயை சுட்டு கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    Advertisement

    அதன்பிறகு பாலாஜியை போலீசார் காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பாலாஜி கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    English Summary

    Police have swiftly arrested the grandson of a former DMK MLA for shooting and killing a stray dog with an air gun in the Nagamanaickanpatti area near Vellakovil, Tiruppur district. Shocking details have emerged during his interrogation.